Breaking News

தேர்தல் மோசடி தொடர்பான டொனால்ட் ட்ரம்பின் கூற்றுக்களை ஏற்றுகொள்ள முடியாது -Scott Morrison

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளி வராததால் பொறுமை காக்க வேண்டும் என்று Scott Morrison கூறியுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் முந்தைய வெற்றிகளை பற்றியும், தேர்தல் மோசடிகளை பற்றியும் அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.

தேர்தல் முடிவுகளைப் பற்றி யோசிக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் Scott Morrison தெரிவித்துள்ளார். அமெரிக்கா அரசியல் செயல்பாட்டில் தான் பங்கேற்கவில்லை என்றும், தெரியாத ஒரு விஷயத்தை பற்றி கூற முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

US-இல் உள்ள அரசியலைப் பொறுத்தவரையில் அனைவரும் பொறுமையாகவும், மரியாதையுடனும் இருப்பதைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம் என்றும், அமெரிக்க மக்கள் தங்கள் ஜனநாயகத்தில் எடுக்கும் முடிவுகளை நாங்கள் மதிக்கின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் Anthony Albanese, பல சூழ்ச்சியை மனதில் கொண்டு அது போலவே அமெரிக்க தேசம் இருக்கும் என்று தனது மனதில் நினைத்துள்ளார் என்று அவர் கூறினார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் Joe Biden ஜனாதிபதி போட்டியில் கண்டிப்பாக வெல்வேன் என்று அவர் நம்புவதாக அவர் கூறியுள்ளார். மேலும் Mr Trump புதன்கிழமை அன்று அளித்துள்ள பேட்டியில் அவர் வெற்றி பெற்றதாக கூறியதுடன், வாக்குப்பதிவு முடிந்த பின் தனது வாக்குகளை திருட எதிர்க்கட்சி முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் ,திரு மோரிசன், Trump மற்றும் Biden-ஐ தான் தொடர்பு கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார். பலரும் வாக்குச்சாவடியில் மோசடி நடந்ததாக கூறி இருந்தாலும் அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.