Breaking News

விக்டோரியாவில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டதால் புதிதாக 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது !

விக்டோரியாவில் உள்ள பரிசோதனை முகாமிற்கு வந்த அதிகமானோரை பரிசோதனை செய்ததில், மேலும் 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மூன்று பேரும், Black Rock cluster பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், தற்போது அந்த பகுதியில் மட்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.

இந்நிலையில் Acting Premier Jacinta Allan கூறும் போது, சமூக பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் 24 பேரும், ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 12 பேர் என மொத்தமாக 36 பேர் உள்ளனர். விக்டோரியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், விரைவில் சரி செய்வதற்கான முயற்சிகள் மூலம் என்ணிக்கையை பூஜ்ஜியமாக குறைப்போம் என Allan கூறியுள்ளார்.

தற்போது இருக்கும் இந்த கொரோனா பரவல் NSW-வில் உள்ள northen beaches-இல் இருந்து Melbourne-னில் உள்ள Black Rock cluster பகுதிக்கு பரவி இருக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தாண்டு இரவின் போது, NSW பகுதியில் இருந்து விக்டோரியாவிற்குள் செல்வதற்கான எல்லை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது, கிட்டத்தட்ட 60,000 பேர் விக்டோரியாவின் எல்லையை கடந்து வந்ததும் காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.

இதனால் எல்லை தாண்டி வந்தவர்களுக்கு பரிசோதனை செய்யவேண்டிய நிலையில், பரிசோதனை முகாம்களில் வேலை செய்பவர்கள் விடுப்பில் சென்றுள்ளனர். எனவே தற்போதுள்ள 190 பரிசோதனை முகாம்களில் வரும் திங்கட்கிழமையில் இருந்து வேலை செய்யும் நேரத்தையும், ஆட்களின் என்ணிக்கையையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் Allan தெரிவித்துள்ளார்.

Department of Health and Human Services-ன் பணியாளர்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியதும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் அத்தியாவசிய தேவைக்காக ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டால் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் Premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.

இதுவரை அதிகமானோர் அரசு அறிவித்த ஹெல்ப் லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளதால், நிறைய பேர் தொடர்பு கொள்ளமுடியாத நிலையும் ஏற்படுட்டுள்ளது. இதனிடையே கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட Victorians, NSW-வில் இருந்து விக்டோரியா எல்லையை கடக்க அப்ளை செய்துள்ளனர் . ஆனால் இதுவரை 117 பேருக்கு மட்டுமே இதற்கான authorities கிடைத்துள்ளது.

இதனிடையே Melbourne’s Federation Square மற்றும் சில ஷாப்பிங் மால்களில் இருந்து கொரோனா தொற்று பரவி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த டிசம்பர் 23 ம் தேதி காலை 11 to 11.30 வரை CBD hub-க்கு சென்றவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும், பரிசோதித்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல, டிசம்பர் 29 ம் தேதி மலை 4 மணி முதல் 6 மணி வரை IKEA Springvale மற்றும் Burwood East -ல இருக்க Kmart and Coles பகுதிக்கு சென்றவர்களில் சிலருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது . எனவே அந்த பகுதிக்கு சென்றவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.