Breaking News

NSW-வில் இரண்டு புதிய கொரோனா தொற்று Berala BWS cluster-ருடன் தொடர்பு !

BSW Bottlle Shop-ல் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் மேலும் இரண்டு கொரோனா தொற்று பரவியுள்ளதால், மக்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு Berala BWS Cluster Authorties கூறியுள்ளது.

22 டிசம்பர் முதல் புதுவருடப்பிறப்பு (கிறிஸ்துமஸ் தவிர) தினமும் 9 மணி நேரமும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள இடமாக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 22,275 கொரோனா பரிசோதனையிலிருந்து புதிதாக எந்த ஒரு தொற்றும் ஏற்படவில்லை. கிறிஸ்துமஸ் விழா ஆரம்பமான நாளிலிருந்து வந்தவர்களை கண்காணித்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டார்கள். அந்த நாட்களிலிருந்து எங்களுடைய நோக்கம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்துவதின் மூலமாக தடுப்பதே என்று NSW Chief Health Office Kery Chant கூறினார்.

இது குறித்து NSW Deputy Premier John Barilaro கூறியதாவது,அதிகமான தொற்றுகள் கிறிஸ்துமஸ் நேரத்தில் Western Syndey மற்றும் Northern Beaches இடங்களில் இருந்தது. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 70,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Cricket Concern

இந்தியா & ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்களை பாதியாக குறைத்துள்ளோம். விளையாட்டு அரங்கத்தில் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், சமூக இடைவெளியினால் தொற்று எண்ணிக்கை குறையும். இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சமூக இடைவெளி விட்டு மீண்டும் டிக்கெட் விற்பனை தொடங்கும் என Cricket Australia Interim CEO Nick Hockley என்று கூறினார்.

மக்கள் கூடும் இடங்களான டிக்கெட் கவுண்டர், உணவு விடுதிகள், பொதுக்கழிப்பிடம் ஆகிய இடங்களில் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என AMA President Omar Korshid என்று கூறினார்.

Shopping Centre, பொதுஇடங்கள், கோவில்கள், உள் அரங்கம் ஆகியவற்றில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவதை எதிர்ப்பவர்களுக்கு New Health Brad Hazzard கூறியதாவது: நீங்கள் முகக்கவசம் அணியாவிட்டால், வீட்டின் உள்ளேயே இருங்கள். நீங்கள் Shopping Centre-க்கு சென்று மற்றவர்களை ஆபத்தில் தள்ளாதீர்கள்.ஆஸ்திரேலிய மக்கள் கட்டாயமாக 1.5 மீட்டர் இடைவெளியை மற்றவர்களிடமிருந்து கடைப்பிடிக்க வேண்டும். சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருக்கவும் என்று கூறியுள்ளார் .