Breaking News

முதலாளிகளின் மோசடிகளை ஏடிஓ (ATO)கண்டுபிடித்துள்ளது!

கூலித் தொழிலாளிங்க வயித்துல அடிச்சா என்னதான் பண்ணுவாங்க !வேல செய்றதே அதுக்கு தானே !

தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பள தொகையில் பல ஊழல் நடந்துள்ளதாக ஆஸ்திரேலியன் Taxation ஆபிசுக்கு(ATO ) தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பல தரப்பினரின் மோசடிகளும் அதில் அம்பலமாகியுள்ளது. ஆனால் யாருக்கும் அபராதம் விதிக்கபடவில்லை. இதனால் அனைவரும் பேரதிர்ச்சியில் உள்ளனர் .ஆயிரக்கணக்கான மோசடிகள் நடத்தப்பட்டும் யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்பது தான் அனைவர்க்கும் மனவலியை தருகின்றது.

கடந்த மார்ச் மாத இறுதியில் 6250 சிறுதொழில் செய்பவர்களுக்கு மானியம் தொடங்கப்பட்ட நிலையில், 8000 பேர் இதில் ஈடுபட்டு மிகவும் சைலண்டாக யாருக்கும் தெரியாமல் பல விதத்தில் டிப்ஸ் பணம் பெற்று உள்ளதாக தெரிகிறது . இதனால் பல தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு பல உண்மையான உழைப்பாளிகளுக்கு சேர வேண்டியவை சேரவில்லை . கிட்டத்தட்ட 2200 தொழிலாளர்கள் கொடுக்கப்பட வேண்டிய ஊதியங்கள் இரண்டு மடங்கு இரட்டிப்பு முறையில் பதிவு செய்து மோசடி நடந்துள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன .

இந்த தவறுக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது $ 1,26,000 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிந்தே செய்திருக்கிறார்கள்.ஏடிஒ (ATO ) எடுத்த புள்ளிவிவரத்தின்படி சுமார் 15000 டீலிங்ஸ் சட்டவிரோதமாக நடத்தப்பட்டிருக்கிறது என்பது அம்பலமாகியுள்ளது.இதுதொடர்பாக குற்றப் பிரிவில், கிட்டத்தட்ட பத்து வழக்குகள் விசாரணைகள் நிலுவையில் இருக்கின்றன.

இதுதொடர்பாக ஃபெடரல் பொருளாளர் ஜோஷ் பிரைட்டென்பெர்க் (Josh Frydenberg) கூறுகையில்,”பெரும்பாலான தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் சரியான வேலைகளை தான் செய்கிறார்கள் என்றும் நாங்கள் அங்கீகரிக்கும் வேலையில் தான் அவை அனைத்தும் இயங்குகிறது என்றும் சொல்லி உள்ளார். இருப்பினும் ATO க்கு பலவிதமான அபராதங்கள் பல விதத்தில் கிடைக்கின்றன, அவை நிர்வகிக்கும் பிற வரிச் சட்டங்களுடன் ஒத்துப்போகின்றன”என்று ஏஏபி க்கு கடந்த திங்கள் அன்று தெரிவித்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க பிரைட்டென்பெர்க் ( Frydenberg) ஒப்புக்கொண்டு தான் எல்லா விஷங்களும் நடக்கிறது என்று தொழில் சங்கங்களுள் முன் வைக்கின்றன . எல்லா குழப்பங்களையும் – குழப்பவாதிகளும் ஒன்று சேர்ந்து தான் தவறு செய்ய தூண்டுகிறார்கள். தவறு செய்ய தூண்டுபவர்கள் தான் முதலில் தண்டிக்க பட வேண்டும் என்றும் சொல்லுகின்றனர்.

இன்னொரு புறம் ஜிம் சால்மர்ஸ் கூறுகையில் ,”மக்களை வேலையில் வைத்திருக்க நாங்கள் ஜாப் கீப்பர்களை தான் பெரிதளவு நம்பி உள்ளோம் என்றும் ,எது எப்படியோ செய்யும் வேலை வீணாக கூடாது என்றும், மக்கள் ஏதும் தவறு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.சரியான லாபம் இல்லாததாலும், கூலித் தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்கு $1500 கூட கொடுக்கப்பட முடியவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளங்கள் அவர்கள் செய்யும் வேலைகளையும் தகுதியையும் பார்த்தே கொடுக்கப்படுகின்றன என்று பல சிக்கல்கள்களும் எழுந்துள்ளது.

மேலும் தவறான முறையில் அதிக பணம் செலுத்தி இருந்தால், அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் ATO செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். தெரியாமல் செய்தால் அது தவறு , தெரிந்தே செய்தால் அது திமிரு என்பது தான் அவர் சொல்ல வந்த விஷயம். தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் அனைவரது எண்ணமும் கூட.
அரசு போடும் திட்டம் , அதை காலி செய்ய ஒரு கூட்டம் .அட அரசியல இதெல்லாம் சாதாரணம் பா என்று பலர் முணுமுணுத்தபடி செல்லுகின்றனர் .