Breaking News

ஆஸ்திரேலியாவின் முதல் தனியார் விண்வெளி ராக்கெட் கூனிபா(Koonibba) பழங்குடியின இடத்திலிருந்து ஏவப்பட்டது !

ஆஸ்திரேலியாவின் முதல் தனியார் விண்வெளி ராக்கெட் கூனிபா(Koonibba) பழங்குடியின இடத்திலிருந்து ஏவப்பட்டது !

ஆஸ்திரேலியாவின் முதல் வணிக விண்வெளி திறன் கொண்ட ராக்கெட் தெற்கு ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கூனிபா (South Australia’s far-west coast)களத்தில் இருந்து ஏவப்பட்டது.
85 கிலோமீட்டர் எட்டுவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ள அந்த ராக்கெட், ஆஸ்திரேலியா மண்ணிலிருந்து புறப்பட்டு எந்தவொரு வணிக ராக்கெட்டும் எட்டாத மிக உயரமானதாக இருக்கும் என்று தெற்கு வெளியீடு(Southern Launch) கூறியுள்ளது.

3.4 மீட்டர் நீளமும் ,34 கிலோ எடையும் கொண்ட முதல் ராக்கெட் செவ்வாய்க்கிழமை ஏவப்பட்டு தோல்வியடைந்த நிலையில் , இரண்டாவது முறையாக 11:45 மணி அளவில் மற்றொரு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. முதல் ராக்கெட்டின் ராக்கெட்டுகளையும் மற்றும் பேலோடுகளையும் (payloads) கண்டுபிடிப்பதற்கான மீட்பு பணிகளும் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து தலைமை நிர்வாகி Lloyd Damp கூறுகையில் ,”
ஆஸ்திரேலியர்களாகிய நாங்கள் இன்று நம்ப முடியாத ஒரு விஷயத்தை அடைந்துவிட்டோம், ஏனென்றால், (Koonibba) கூனிபாவில் ஆஸ்திரேலியா மீண்டும் ஒரு பெருமை வாய்ந்த விண்வெளி திறன்கொண்ட தேசமாகவும் இருக்க இந்த முதல் சிறிய முயற்சியை எடுத்துள்ளது என்றும் சொல்லி உள்ளார் .

இதன் மூலம் எங்கள் திறனையும் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம், அடுத்து இரண்டு மணி நேரத்தில் மற்றொரு ராக்கெட்டையும் நாங்கள் ஏவுவோம், இது எங்களது திறனை முழுமையாக நிரூபிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலையில் 200 பழங்குடியின மக்கள் இல்லாமல் இந்த ஏவுதல் நிகழ்ந்துள்ளது.
எலக்ட்ரானிக் போர்களுக்கு எப்போதும் ஆர்வம் உள்ளதாக பெருமை பேசும் DEWC தனது செயல்முறைகளை சோதிக்க Southern Launchஉடன் இணைந்துள்ளது.

மேலும் DEWC பல செயற்கை கோள்களையும் உருவாக்கி வருகின்றது, இந்த செயற்கைக்கோள்கள் மூலம் ஆஸ்திரேலியா பாதுகாப்பு படைக்கு எதிரிப் படைகளிடம் இருந்து ஆபத்தான ரேடார் சிக்னல்களைக் கண்டறிய உதவும் என்றும் கூறுகின்றனர். சனிக்கிழமை காலை இந்த ராக்கெட் ஏவப்பட்ட பொழுது ஒரு சிறிய பொருள் ராக்கெட்டின் விளிம்பில் பயன்படுத்தப்பட்டது.

மேலும் இந்த செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக பூமிக்கு திரும்பும் பயணத்தில் அதனுள் வைக்கப்பட்டுள்ள சென்சார்கள் பல தகவல்களை சேகரிக்கும். அப்படி சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் (company’s software) நிறுவனத்தின் மென்பொருளும் இணைக்கப்படும்..

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மெலிசா பிரைஸ்(Melissa Price) கூறுகையில். இந்த ராக்கெட் ஆஸ்திரேலியாவில் இதுவரை ஏவப்பட்ட மற்ற ராக்கெட்டுகளை போல் இல்லை, இது ஒரு புது விண்வெளி தொழில்நுட்பத்தை கொண்டது, மிகக் குறைந்த செலவில் எளிதில் கிடைக்கக்கூடிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த அளவில் செயற்கைக் கோள்களை கொண்டு செலுத்திய ராக்கெட்டுகள் என்று அவர் கூறியுள்ளார்.

செவ்வாய்கிழமையன்று SA பிரீமியர் ஸ்டீவன் மார்ஷல் (SA Premier Steven Marshall )கூறுகையில் ,”இந்த ராக்கெட் ஏவுதல் என்பது ஆஸ்திரேலியாவிற்கு வணிக ரீதியானது பலம் என்று கூறியுள்ளார். இதுவரை ஏவப்பட்ட ஏவுகணைகள் அனைத்தும் அரசாங்கத்தின் நோக்கங்களாகும், ஆனால் இது ஒரு வரலாற்றுக்கான நேரம், உண்மையிலேயே ஆஸ்திரேலியர்களுக்கு இதனால் நன்மையம்,பெருமையும் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.