Breaking News

வேகமாக விற்கப்படும் விமானமாக வரலாற்றில் Qantas விமானம் சாதனை!

ஒரு விமானத்தில் செல்ல $ 800 அல்லது அதற்கு அதிகமாக யாராவதுசெலவு செய்வார்களா? ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 130க்கும் மேற்பட்டோர் செலவழிக்க தயாராக உள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றது .வேகமாக விற்கப்படும் விமானங்களில் குவாண்டாஸ் விமானம் முதன்மை வகிக்கிறது.

கொரோனா பாதிப்பு தொடங்கிய நாள் முதல் கிட்டத்தட்ட $ 2 பில்லியன்கள்,இந்த விமான நிறுவனம் வருமானம் ஈட்டி உள்ளது. “கிரேட் சதர்ன் லேண்டில் “( Great Southern Land) தொடங்கி சிட்னியில் வந்து இவ்விமானம் இறங்கும்.கொரோனா பாதிப்பு காரணமாக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் பலருக்கு “கிரேட் பேரியர் ரீஃப் மற்றும் உலுரு” (the Great Barrier Reef and Uluru) போன்ற பார்வைகளும் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வானத்திலிருந்து எல்லை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றும் அதன் விளம்பரங்களும் கூறுகின்றது.

7 மணி நேர விமான பயணத்தில், நிறுத்துமிடங்கள் இல்லாத பொருட்கள் எதுவும் தேவை இல்லை ,என்றும் Kata Tjuta, Byron Bay, Bondi Beach and Sydney harbour பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த அடையாளத்திற்காக பயணிகளை முடிந்தவரை நெருங்க கிட்டத்தட்ட 4000 அடி வரை விமானம் பறக்கும் என்றும் குவாண்டாஸ் கூறுகிறார்.

பொருளாதார டிக்கெட்டுகளின் விலை $ 786 , பிரீமியம் பொருளாதாரத்தின் விலை $ 1787 , வணிக பிரிவுகளின் விலை $ 3787 இருந்தது .ஆனால், வியாழக்கிழமையன்று பத்து நிமிடத்திற்குள் விமானம் விற்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் பிரபலமான விமானம் என்று எங்களுக்கு தெரியும். ஆனால், பத்து நிமிடத்திற்குள் இவ்விமானம் விற்கப்படும் என்று எங்களுக்கே தெரியாது ,நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று ஒரு குவாண்டாஸ் செய்தி கொடுப்பவர் கூறியுள்ளார்.அதனால் இது, வரலாற்றிலேயே வேகமாக விற்கப்படும் விமானமாக கருதுகின்றனர்.

கேப்டன் டேவிட் சம்மர் கிரீன் (Captain David Summergreene) அக்டோபர் 10ஆம் தேதி இந்த விமானத்தை இயக்குவார்,மேலும் பல மாதங்கள் கழித்து காக்பிட்டில் (cockpit )இருந்து பறப்பதை சூப்பர் ஸ்டோக் (super stoked) என்று கூறியுள்ளார். விமானத்தை ஓட்ட கற்றுக் கொண்ட நாளிலிருந்து, தன்னை இந்த விமான பயணம் அழைத்துச் செல்கிறது என்று பூரிப்புடன் கூறியுள்ளார். இது போன்ற அருமையான விமானத்தில் பறப்பது மிகவும் அற்புதமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதத்திலிருந்து குவாண்டாஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஜாய்ஸ்(Alan Joyce ), மாநில எல்லைகளை மூடுவது குறித்து தனது கண்டனக் குரல்களை எழுப்பி வருகிறார். மேலும் சுகாதாரத்தை யாரும் முக்கியமாக கருதுவதில்லை, தலைவர்கள் அனைவரும் அரசியல்களால் இயக்க படுகிறார்கள் என்றும் கடுமையாக சாடினார்.இது குறித்து தாஸ்மானியா மற்றும் குயின்ஸ் லேண்ட் பிரதமர்களை நேரடியாக சந்தித்து தனது கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார், ஆனால் பிரதமர்களோ டிசம்பர் அல்லது கிறிஸ்துமஸ் பிறகு வரை தங்கள் மாநில எல்லைகளை திறக்கப்பட போவதில்லை என்று தங்களது கருத்துக்களை தெளிவாக கூறி விட்டனர்.

உள்நாட்டு பயணத்திற்காக தேவைகள் அனைத்தும் அதிகமாக இருப்பதால், விமான சேவைகளை அதிகப்படுத்துமாறு மாநில தலைவர்களை கேட்டு மனு ஒன்றை அளித்தனர். மேலும் கொடுக்கப்பட்ட மனுவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னதாகவே 40,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த மனுவில் எல்லைகளை மூடுவதை பற்றியும், ஹாட்
ஸ்பாட்டை (hotspot)பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில், திரு ஜாய்ஸ் கிரேட் சதர் லேண்ட் (Great Southern Land)விமானம் அனைவருக்கும் உயிர் நாடி என்றும் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் ,இந்த விமானம் வானில் பறப்பதை பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். மற்ற விமானங்கள் வேலை செய்வதையும் நாங்கள் நிராகரிக்கவில்லை , விமானிகள் அனைவரும் வேலை செய்ய வேண்டுமென்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.
தைவான் விமான நிறுவனம் ஈ.வி.ஏ சமீபத்தில், ஒரு விமானத்தை ஏற்பாடு செய்து ஜப்பானிய விமான நிறுவனமான ஏ.என்.ஏ கடந்த மாதம் மட்டும் 90 நிமிட “ஹவாய் பொருள்களுடன்” விமானத்தில் பயணிகளை அழைத்துச் சென்றது. இந்த புதிய வகையான பயணத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு Qantas என்னும் அழகிய விமானங்களை திட்டமிட போவதாகவும் கூறியுள்ளார்.