Breaking News

ஆஸ்திரேலியா நாட்டின் எல்லைப் பகுதிகள் மூடி கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகிய நிலையில் தனித்து வாழும் குடும்பங்கள் நம்பிக்கை இழந்து வருகிறது!

மூடிக்கிடக்கும் எல்லை பகுதியால் ,மக்கள் வேதனையில் நம்பிக்கை இழப்பு !

அதீத கொரோனா நோய் பரவல் காரணமாக அவசரகால நடவடிக்கையாக உலகம் முழுவதும் பல நாடுகள் தங்களது எல்லைப் பகுதிகளை மூடிய நிலையில் ஆஸ்திரேலியாவும் அதே போன்ற ஒருமித்த முடிவோடு நாட்டின் எல்லைகளை கடந்த ஆறு மாதங்களாக மூடி உள்ளது.

இவ்வாறு அந்தந்த நாடுகள் தங்களின் எல்லைகளை நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மூடியுள்ளதையொட்டி அதில் வசிக்கும் குடிமகன் அல்லாதோர் மற்றும் நிரந்தரமாக வசிப்போர் தற்காலிக விசாவில் வந்தவர்கள் என அனைவரும் தங்களது குடும்பங்களை பிரிந்து பல மாதங்களாக தவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா பெற்று குடியேறிவர்கள் ஆறு மாதங்கள் ஆகியும், இன்றளவும் நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்காமல் இருக்கின்ற காரணத்தினால் ,மீண்டும் தங்களது குடும்பத்தாருடன் எப்பொழுது இணையப் போகிறோம் என்ற ஏக்கத்தில் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

பிரதமர் Scott Morrison கடந்த மார்ச் 18ம் தேதி கொரானா நோய் தொற்று தொடக்க காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருவோரும் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுபவர்களும் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் சொல்லியவாறு ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும் தடை உத்தரவு எப்பொழுது நீக்கப்படும் என்று எந்த ஒரு செய்தியையும் வெளியிடாமல் பிரதமர் Scott Morrison மௌனம் சாதித்து வருகிறார்.

குறிப்பிட்ட எந்த ஒரு கால வரிசையும் இல்லாமல் நாடு தழுவிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் தற்காலிகமாக விசா எடுத்துள்ளவர்கள், பக்கத்து நாட்டிலே இருந்தாலும் அவர்களது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ,அவர்கள் இப்பொழுது அரசின் மீதான நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாக கூறி வருகின்றனர்.

மார்ச் 25-ந் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரை 40,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணத்திற்காக விண்ணப்பத்தை அளித்துள்ளனர். ஆனால் அதில் 13,300 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று மோரிசன் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பும் சர்வதேச பயணிகளுக்கும், குடிமக்களுக்கும், நிரந்தரமாக குடி இருப்பவர்களுக்கும், அக்டோபர் நடுவிலிருந்து வாராந்திர பங்கை 2000 ஆக உயர்த்துவதற்கும் அறிவித்திருந்தார்.மெல்போர்னில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஒவ்வொரு வாரமும் ஆஸ்திரேலியாவிற்கு வரக்கூடிய விமானங்கள் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் ஜூலை தொடக்கத்தில் அனைவரும் திரும்பி வந்தால் அவர்களின் தலைகள் தூக்குவதை நாங்கள் காண விரும்புகிறோம். அதுவே எங்களது குறிக்கோளாக இருக்கும் என்றும் மோரிசன் கூறியுள்ளார்.