Breaking News

மூன்று நாள் ஊரடங்கில் ,ஒரு நாள் முடிந்தது ..குயின்ஸ்லாந்தில் எந்த ஒரு உள்ளூர் தொற்றும் இல்லை !

Brisbane ஊரடங்கில் இருப்பதால் எந்த ஒரு புதிய கொரோனா தொற்றும் இல்லை. விக்டோரியாவிலிருந்து ஜனவரி 5ஆம் தேதி Brisbane- க்கு Jestar விமானத்தில் வந்த பெண்ணிற்கு தொற்று இருப்பது உறுதியானது. விக்டோரியன் Authorties 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு தான் அந்த பெண்ணை பயணத்திற்கு அனுமதியளித்தது. எனினும் அந்த பெண்ணிற்கு கொரோனா பாசிட்டிவ் ஆக உள்ளது. இது மிக குறைவான தொற்றாக இருந்தாலும், தொற்றே இல்லை என்று கூற முடியாது. அதனால் தான் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்கிறோம்.

Maleny-யில் அல்லது அந்த விமானத்தில் பயணம் செய்திருந்தாலும், ஏதேனும் அறிகுறி இருந்தாலும் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு Queensland Chief Health Office Jeannette Young கூறினார்.

Brisbane Hotel ஊழியருக்கு தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால், Queensland மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. அந்த பெண்மணிக்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் Brisbane, logan, lpswich, Moreton Bay, Redland பகுதிகளில் உள்ள மக்கள் திங்கட்கிழமை ஆறு மணி முதல் தங்கள் வீட்டிலேயே இருக்குமாறு கூறப்பட்டது. அவசியமான வேலைகளை தவிர வேறு எந்த காரணத்திற்கும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டனர்.

நாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். இது மக்களை வெறுப்படைய செய்கிறது. அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இதை நாம் பழகிக் கொள்ள வேண்டும். எதுவும் நம்மால் முடியும், இவற்றிலிருந்து நல்ல விஷயங்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று Dr. Young கூறினார்.

மூன்று நாட்கள் ஊரடங்கு என்பதால் Super Market-இல் மக்களுடைய கூட்டம் அதிகமாக உள்ளது. ஊரடங்கு நேரத்திலும் Super Market திறந்து இருக்கும். அதனால் மக்கள் அச்சமடைய வேண்டாம்.மக்கள் இந்த ஊரடங்கு மூன்று நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்படும் என்று நினைக்கிறார்கள். நாங்கள் Super Market மூடமாட்டோம் என்று Health Minister Yuette D’ath கூறினார்.

மேலும் Greater Brisbane பகுதியில் உள்ள மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். அனைவரும் அமைதியாகவும், உறுதியாகவும் இருக்கவும். நாங்கள் இதை பார்த்துக் கொள்கிறோம். இரண்டு நாட்களாக நாங்கள் இந்த சூழ்நிலையை கண்காணித்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

Covid 19இன் கழிவுகள் கழிவுநீரில் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் புது தொற்று ஏற்பட்டு உள்ளது என்று அர்த்தம் கிடையாது. இது தொற்று ஏற்பட்ட மனிதனிடமிருந்து வந்திருக்கலாம். அந்த மனிதர் தொற்று இல்லாத சமயத்தில் இது ஏற்பட்டு இருக்கலாம். இதனால் அச்சமடைய வேண்டாம் என்று Dr. Young கூறினார்.