Breaking News

கொரோனா வைரசால் ஏற்படும் ஆபத்தை தடுப்பதே எங்கள் நோக்கம்!

United Kingdom-லிருந்து மிகவும் எளிதாக பரவக்கூடிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று Prime Minister Scott Morison கூறினார்.

இங்கிலாந்தின் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில், உள்நாட்டு, வெளிநாட்டு பயணத்திற்கு தகுந்த பாதுகாப்பு எடுக்க National Cabinet முடிவு செய்துள்ளது. Greater Brisbane Common Wealth Levelல் கொரோனா வைரஸ் மையதில் உள்ளது என்றும், மூன்று நாள் ஊரடங்கும் போடப்பட்டது. மாறுதலுக்கு உட்பட்டு ஆஸ்திரேலியா வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை எடுப்பது குறைக்கப்பட்டது.

United Kingdom-லிருந்து வருபவர்களுக்கு, விமானத்தில் அனுமதிப்பதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பயணம் செய்வோருக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. (குழந்தைகள் தவிர). இங்கிலாந்து வைரஸின் தாக்கத்திற்கு ஏற்றபடி நம்முடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று Scott Morison கூறினார்.

சர்வதேச நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வருபவர்கள் New South Wales, Western Australia மற்றும் Queenslandல் 50% குறைக்கப்பட்டுள்ளது. இதில் NSW-வில் 1505 மக்களும், Western Australia-வில் 512 மக்களும் மற்றும் Queensland-ல் 500 மக்களும் வாரத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். விக்டோரியாவும் 490 மக்களை வாரத்திற்கு அனுமதித்தது.

இது இரண்டாம் அலையை குறைக்க உதவியது. பிப்ரவரி 15ஆம் தேதி வரை மக்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து Cabinet-ல் முடிவு எடுக்கப்பட்டது.80% ஆஸ்திரேலியர்கள் இப்போது புதிய வைரஸ் உள்ள நாடுகளில் உள்ளனர். அவர்களுக்கு புதிய தொற்று இருக்கலாம் என்பதால் தான் இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று Prime Minister Scott Morison கூறினார்.

கடினமான மற்றும் வேகமாக பரவும் கொரோனா வைரசால் ஏற்படும் ஆபத்தை தடுப்பதே எங்கள் நோக்கம். எங்களது முக்கிய பிரச்னை ஆஸ்திரேலியர்களை பாதுகாப்பது என்றார். இந்த வைரசை கட்டுப்படுத்துவது மிக கடினம். அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு தினமும் சோதனை செய்யப்படும் என்று Chief Medical Officer Paul Kelly கூறினார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச விமான குழுவில் உள்ளவர்கள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். மேலும் 38,000 மக்கள் வெளிநாட்டிலிருந்து திரும்ப விரும்புவதாக வெளியுறவு மற்றும் வர்த்தக துறையில் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.