Breaking News

புத்தாண்டு ஈவ் கொண்டாட்டங்கள் குறித்து NSWவில் எளிதான கட்டுப்பாடுகள் !

பண்டிகை காலங்களில் Sydney-க்கு செல்பவர்கள் அரசு அனுமதி பெற்று இருக்க வேண்டும் .புத்தாண்டு ஈவ் கொண்டாட்டங்களுக்கு ஏறத்தாழ 3000 மக்கள் NSW-வில் கூடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட தளர்வுடன் கூடிய விதிகளை Premier Gladys Berejikilan தெரிவித்தார்.இதற்கு எல்லோரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

NSW-வில் ஒரு நோய் தொற்று கூட கண்டறியப்படவில்லை இருந்தும் தளர்வுகளோடு கூடிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. இவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்டு வந்தும் நோய் தொற்றின் தாக்கம் சில இடங்களில் வேகமாக இருக்கின்றது.

பண்டிகை காலங்களில் நண்பர்களை சந்தித்தாலோ, தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் குடும்பம் இருந்தாலோ, உணவகங்களில் விருந்து ஏற்பாடு செய்து இருந்தாலோ சேவை மையம் NSW-விடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

கட்டுப்பாடுகள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் ஒரு நபர் கூட நகரத்தில் சுற்றி திரியக்கூடாது என்று விதிகள் போடப்பட்டுள்ளன என்று Ms. Berejiklian தெரிவித்தார்.தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியாவில் நோய் தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த 48 மணி நேரத்திற்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

திங்கள் முதல் 30 பாடகர்கள் பாட அனுமதி வழங்கப்பட்டது. 12 வயதுக்குட்பட்டோர் மற்றும் முதியோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

டிசம்பர் முதல் 300 பேர் இறுதி சடங்கிலும், திருமணங்களிலும், Corporate செயல்பாடுகளிலும் அனுமதிக்கப்படுவர். வரும் திங்கள் முதல் குறைந்தது 500 பேர் தேவாலயங்களில் சேவைகள் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று Ms. Berejiklian கூறியுள்ளார்.
புதன்கிழமை அன்று NSW சுகாதாரத்துறை கூறியதாவது உணவகங்களில் தனிமைப்படுத்தப்பட்ட19 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் எவ்விதமான போக்குவரத்தில் வந்ததாலும் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். எந்தெந்த இடங்களுக்கு சென்று வருகின்றனர் என்ற விவரங்கள் தெற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கடந்த 14 நாட்களாக இவைகள் கடைபிடிக்கப்படுகிறது.