Breaking News

அக்டோபர் மாதத்தில் 180,000 க்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் பணியில் அமர்ந்திருக்கிறார்கள் !

அக்டோபர் மாதத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அது, 7 சதவீத வேலையின்மையில் எந்த மாற்றமும் இல்லை.

வேலையின்மை 30,000 க்கு குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் கடந்த அக்டோபரில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 178,800 ஆக அதிகரித்தது. எனினும் 7 சதவீதமாக இருந்துவரும் வேலையின்மையில் எந்த மாற்றமும் காணவில்லை. வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்று Commonwealth Securities chief economist Craig James கூறினார்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக வேலை தேடுவோரின் எண்ணிக்கை 64.9 சதவீதத்திலிருந்து 65.8 சதவீதமாக அதிகரித்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் முழுநேர பணிகளின் எண்ணிக்கை 97,000 ஆகவும், பகுதிநேர பணிகளின் எண்ணிக்கை 81,800 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலையில் வேலையின்மை 7.5 சதவீதமாக உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் இது ஆண்டு இறுதிக்குள் 8 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வேலைவாய்ப்பின்மை கடந்த மார்ச் மாதத்தில் இருந்ததை விட 1.7 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் Bureau of Statics தெரிவித்துள்ளது.

  அக்டோபர் மாதத்தில் Tasmania, Queensland மற்றும் Victoria ஆகிய பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்பை அதிகரித்து வேலையின்மையை 5 சதவீதத்திற்கு குறைப்பது தேசத்தின் முக்கிய பணியாகும், மேலும் இது 2022 ஆம் ஆண்டுக்குள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லையென Reserve Bank அறிவித்துள்ளது.