Breaking News

நெருங்கிய தொடர்புகள் மூலம் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்.. தென் ஆஸ்திரேலியா கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது !

பாதிக்கப்பட்டவர்களின் கூற்று பொருந்தாத நிலையில், அவர்களைப் பின்தொடர்ந்தபோது அவர்கள் பொய் சொன்னார்கள் என்பது தெரியவந்ததாகவும், பாதிக்கப்பட்ட நபரின் சுயநலமான நடவடிக்கைகளால் முழு மாநிலமும் மிகக் கடினமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் பலவணிகங்கள், தனிநபர்கள், குடும்பங்கள் பாதித்துள்ளது, என்றும் தென் ஆஸ்திரேலியா Premier Steven Marshall கூறியுள்ளார்.

இந்தப் பொய்யின் விளைவாக, முழு நாடும் ஆறு நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தள்ளப்பட்டது என்றும், இந்த வாரத்தொடக்கத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் சனிக்கிழமை நள்ளிரவிலிருந்து திரும்பப் பெறப்படும் என்று போலீஸ் கமிஷனர் Grant Stevens கூறியுள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கட்டுப்பாடுகள்:

  • இறுதிச் சடங்குகளுக்கு 50 பேரும், திருமணங்களுக்கு 150 பேரும் அனுமதிக்கப்படும், அதே சமயம் விருந்தினர்கள் அமர்ந்திருக்க வேண்டும், நடனமோ கலை நிகழ்சிகலோ இருக்கக் கூடாது.
  • மத வழிபாடு விழாக்களில் 100 பேருக்கும், தனியார் கூட்டங்களில் 50 பேருக்கும் அனுமதியளிக்கப்படும்.
  • தனியார் குடியிருப்புகளில் கூடியிருக்க 10 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.
  • Hairdressers மற்றும் Beauty therapists போன்ற Personal care providers கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும், அதே நேரத்தில் patrons கட்டாயமாக முகக்கவசங்கள் அணியவேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது.
  • சனிக்கிழமை நள்ளிரவு முதல் Gyms மீண்டும் திறக்கப்படும், ஆனால் பள்ளிக்கூடங்கள் திங்கட்கிழமை காலை முதல் தான் திறக்கப்படும்.

வைரஸ் தாக்கம் இல்லாமல் மூன்று வாரங்களை கடந்தது Victoria

Victoria-வின் இரண்டாவது வைரஸ் அலையின் விளைவாக 18,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளில் 800 இறப்புகள் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில், எந்த ஒரு புதிய COVID-19 வழக்கோ அல்லது அதனால் இறப்போ இல்லாமல் Victoria மூன்று வாரங்கள் கடந்துள்ளது.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை டிசம்பர் 7 முதல் சர்வதேச பயணிகளின் வருகையைப் பெறத்தொடங்குவதாகவும், ஒரு நாளிர்க்கு 160 பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசாங்க செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.