Breaking News

புதிய கொரோனா தொற்று காரணமாக WA எல்லைகளை திறப்பதில் மாற்றம் !

NSW உணவகங்களில் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தாமதமாக எல்லைகள் திறக்க முடிவு செய்யப்படும் என்று WA தெரிவித்தது. வியாழக்கிழமை அன்று சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard உள்நாட்டில் புதிய நோய் தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என்று அறிவித்தார்.

Sydney உணவகங்களில் தற்சமயம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நோய் தொற்று உள்ளது .எனவே மீண்டும் எல்லைகள் திறப்பதில் தாமதம் என்று மேற்கு ஆஸ்திரேலிய Premier தெரிவித்தார். டிசம்பர் 8 முதல் NSW மற்றும் விக்டோரிய எல்லைகள் திறக்கப்படும் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது NSW சுகாதார அதிகாரிகளிடம் கூடுதல் தகவல்களை பெற்ற பின் எல்லைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இதனால் தான் எல்லைகள் மீண்டும் திறப்பது பற்றி மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்று பிரதமர் Mark McGowan வியாழக்கிழமை அன்று அறிவித்தார். ஆகவே NSW தலைமை சுகாதார அதிகாரியின் அறிவுரைப்படி எல்லை திறப்பதை தாமதப்படுத்துகிறோம் என்று அறிவித்தார். NSW அரசாங்கம் வியாழனன்று உணவகங்களில் பெண்கள் பணிபுரிந்ததை உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்று சமுக பரவல் அடைந்துள்ளதா அல்லது உணவகங்களில் இருப்பவர்களுக்கு மட்டும் உள்ளதா என்று தீர்மானித்த பிறகு முடிவு எடுக்கப்படும். NSW வில் எவ்வளவு நோய் தொற்று உள்ளது என்று கண்டறியப்படும்.

விக்டோரியாவிற்கு எல்லைகளை திறக்க WA தாமதப்படுத்துகிறது. இந்த வார இறுதியில் முடிவு எடுக்கப்படும் என்று Mr. McGowan தெரிவித்தார். சுகாதாரத்துறை ஆலோசனைப்படி மாநிலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது.

இந்த புது நோய் தொற்று குறித்து Dr. Chant கூறுகையில்,நோய் தொற்று உள்ள அந்த பெண் Novotel உணவகத்தில் நவம்பர் 28 முதல் 30 வரை பணியாற்றினார். மற்றும் lbis உணவகத்தில் நவம்பர் 27 பணியாற்றினார். மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை பார்த்துள்ளார்.

அவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளவில்லை. நோய் தொற்று உள்ள நாட்களில் அவர் ரயில் பயணங்கள் செய்துள்ளார். ஆகவே அந்த வழி பயணம் செய்தவர்கள் உடனடியாக சோதனை செய்யப்பட வேண்டும் மற்றும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இது மிகவும் சிரமமான சூழ்நிலை என்று NSW Premier Gladys Berejikilan தெரிவித்தார். அந்த பெண் சோதனைக்கு தானாக முன் வந்ததை Chant பாராட்டினார்.