Breaking News

தொழிற்கட்சியின் புதிய ‘பன்முக கலாச்சார அறிக்கை’ கூறுவது என்னென்ன ?

மொழி மற்றும் கலாச்சாரத்தில் வேறுபட்ட பின்னணியில் உள்ள மக்களின் கவலைகளை தீர்ப்பதில் இந்த அரசு தொடர் தோல்விகளை சந்தித்து உள்ளதாக இந்த அறிக்கை காட்டுகிறது.புலம்பெயர்ந்த மக்களுக்கு Federal அரசின் ஆதரவு இல்லை என்றும் அவர்கள் சமுதாயத்தில் மிகவும் பின் தங்கியுள்ளனர் எனவும் எச்சரிக்கின்றனர்.

இந்த சமூக மக்கள் நல் சூழலில் வாழ இந்த அரசு இன்னும் பல கொள்கைகளை வகுக்க வேண்டியுள்ளது என Andrew Giles கூறினார்.
கொரோனா பரவலினால் இச்சமூக மக்கள் வேலை மற்றும் வருமான இழப்புகளை சந்தித்துள்ளனர். அதனை தீர்க்க 2020 Federal Budget தவறிவிட்டது என்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

Morisson ஆட்சியில் பலதரப்பட்ட சமூக மக்களும் இடம்பெயர்ந்தோறும் மற்றும் பல ஆஸ்திரேலிய மக்களும் கைவிடப்பட்டு சமுதாயத்தில் பின் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது” என்று Mr.Giles கூறினார் .மொழி மற்றும் கலாச்சார ரீதியில் வேறுபட்ட மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற இந்த அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மூடப்பட்ட வணிக நிறுவனங்களில் பணிநிறுத்தங்களால் இடம்பெயர்ந்த சமூகங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க அனைவரின் பங்களிப்பும் அனைவரின் முழு திறன் வெளிப்படுத்துதலும் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் Prime Minister Scott Morrison, அக்டோபர் மாத பட்ஜெட் அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் பதில் அளிக்கும் ஒரு பட்ஜெட்டாக இருக்கும் என்று தெரிவித்தார். விசா மற்றும் குடியுரிமை விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்துள்ளன என்ற ஒரு விமர்சனமும் வைக்கப்பட்டுள்ளது.

Partner Visa-களுக்கான ஆங்கில மொழி சோதனையை ‘கொடுமை’ என்று LABOUR கட்சி விமர்சித்துள்ளது. -Partner Visa-விற்கு விண்ணப்பிக்கும் இடம்பெயர்ந்தோர் மேலும் அவர்களின் ஆதரவாளர்கள், 2021 ஆண்டின் பிற்பகுதியில் இருந்து ஆங்கில மொழி திறன்களை நிரூபிக்க வேண்டும் அல்லது கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று Budget-ல் அறிவிக்கப்பட்டது.

“தகவல்களின் பற்றாக்குறை திறம்பட பதிலளிக்கும் சேவைகள் மற்றும் கொள்கைகளை வைப்பதற்கான எங்கள் திறனைக் குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று அறிக்கை கூறுகிறது. கொரோனாவின் திடீர் பரவலின் போது, இனவெறி அதிகரித்து வருவதாக வெளியான தகவல்களுக்கு Labour கட்சி ஒரு புதிய இனவெறி எதிர்ப்பு திட்டத்தினை கொண்டு வர உள்ளது.

2020-21budbet-இல், ஆஸ்திரேலியாவின் சமூக ஒத்துழைப்பை ஆதரிப்பதற்கும், பலதரப்பட்ட சமூகங்களுடன் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் $62.8 million தொகையை ஒதுக்கியது. இதற்கு முந்தைய ஆண்டு அமல்படுத்திய தொகையை விட இது குறைவாகும்.கடந்த ஆண்டு $71 million ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.