Breaking News

பிரிட்டிஷில் 90 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது !

பிரிட்டிஷில் 90 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது !

பிரிட்டிஷில் 90 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.இவரே தடுப்பூசி பெற்ற உலகின் முதல் பெண்மணி ஆவார். Britain தனது மக்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியது. Margaret keenanக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது அதை அவர் பாக்கியமாக கருதுகிறார்.

90 வயது மூதாட்டி Margaret keenanக்கு செவ்வாய் அன்று Central England-ல் Pfizer covid -19 என்ற தடுப்பூசி போடப்பட்டது. அவரே தடுப்பூசி போடப்பட்ட உலகின் முதல் பெண்மணி ஆவார். சென்ற வாரம் தான் அவருக்கு 91 வயது தொடங்கியது. அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அங்கு வேலை செய்யும் செவிலியர்கள் தள்ளி வந்த போது இருபக்கமும் செவிலியர்கள் நின்று கொண்டு கை தட்டி பாராட்டினார்கள் . தொற்று நோயக்கான தடுப்பூசியை Britain முதன்முதலில் தனது பொது மக்களுக்கு போட தொடங்கியது. தடுப்பூசி போடப்பட்ட Ms. Keenan மிகவும் பெருமைப்படுவதாக கூறினார்.

இது எனக்கான பிறந்தநாள் பரிசாக பார்கிறேன். நான் எனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் காலம் கழிக்க புத்தாண்டை எதிர் நோக்குகிறேன் என்று தெரிவித்தார். அவரது நண்பர்கள் அவரை மேகி என்று அழைப்பர். அவர் ஒரு சாதாரண நகை கடை ஒன்றில் உதவியாளராக பணியாற்றியவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் ஓய்வுபெற்றார். அவருக்கு ஒரு மகள்,மகன் மற்றும் நான்கு பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

Ms. Parson ஏறக்குறைய 24 ஆண்டுகள் உலக சுகாதார சேவை மையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்கள் மிகவும் மோசமானதாக இருந்தது. ஆனால் தற்சமயம் நல்ல சூழ்நிலை தெரிகிறது என்று கூறியுள்ளார். உலகிலேயே Britain தொற்று நோயால் மிகவும் பாதிக்கப்பட்டது . Britainல் கிட்டத்தட்ட 61,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளது .

உலகின் பொருளாதாரத்தை இழக்க செய்தது மற்றும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை கொன்றது. தடுப்பூசி கண்டுபிடிக்க உழைத்த விஞ்ஞானிகள், உலக சுகாதார சேவை மையம், தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்பான விதிகளை பின்பற்றும் அனைவரும் Mr. Boris Johnson நன்றி தெரிவித்தார்.