Breaking News

ரசியாவில் திறக்கப்பட்ட புது பள்ளிவாசல் ..

ரசியாவில் திறக்கப்பட்ட புது பள்ளிவாசல் .. தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம்..

ரசியாவின் தலைநகர் மாஸ்கோவின் கதீட்ரலில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலில் ஈத் தொழுகையில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.. சுமார் 17 கோடி டாலர் செலவில் 10 ஆண்டு கடின உழைப்பில் கட்டப்பட்ட இப்பள்ளிவாசல் ஐரோப்பாவின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது..இந்த பள்ளிவாசலின் உள்ளரங்கத்தில் சுமார் 10000 ஆயிரம் பேர் பிராத்தனை செய்யும் வண்ணம் கட்டுப்பட்டுள்ளது..

நேற்றைய பள்ளிவாசல் திறப்பு விழாவில் ரசிய அதிபர் புதின் , துருக்கி அதிபர் தய்யிப் ஏற்தொகன் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.,.

ரசியாவில் சுமார் இரண்டரை கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.. ரசியாவின் இரண்டாவது பெரிய மார்க்கம் இஸ்லாம் ஆகும்.. மேலும் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் சுமார் 20 லட்சம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.. இருந்தும் கூட அங்கு சுமார் 6 பெரிய பள்ளிவாசல்கள் மட்டுமே உள்ளது.. காரணம் கடந்த கம்யுனிச ஆட்சியாகும்.. தற்பொழுது ரசியாவில் கம்யுனிச ஆட்சி வீழ்ந்து விட்டதால் அங்கு மதங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டு அங்கு மத சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது.. இருந்தும் கூட அங்கு கிறித்துவ மதத்துக்கு மட்டுமே சுதந்திரம் கொடுக்கப்படுவதாகவும் இஸ்லாம் முந்தய கம்யுனிச ஆட்சியை போல தற்பொழுதும் நசுக்கப்படுவதாகும் குற்றசாட்டுகள் உள்ளனர்.

மேலும் செசன்யா பிரதேசத்தில் ரசிய அரசு நிகழ்த்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிரான கண்டன குரல்களும் முஸ்லிம் சமூகத்தில் ஓங்கி ஒலிப்பதாலும் , வருங்காலங்களில் முஸ்லிம் இளைனர்களின் மக்கள் தொகை ரசியாவில் அதிக அளவில் இருக்கும் என்ற கணக்கிடப்படுவதாலும் , ரசியாவிற்கு எதிரான தடைகளை ஐரோப்பிய நாடுகள் வலுக்கட்டாயமாக திணித்து வருவதாலும் முஸ்லிம் நாடுகளுடனான ரசியா தனது உறவை புதுப்பிக்கும் முயற்சியாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது