Breaking News

அரசின் ஊதிய திருட்டு ஒடுக்கு முறையின் கீழ் முதலாளிகளுக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை !

கடுமையான ஊதியத் திருட்டை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், கடுமையான அபராதங்கள் முதலாளிகள் மீது விதிக்கப்படும் என்று federal government கூறுகிறது. இந்த சட்ட சீர்திருத்தங்கள் வரும் புதன்கிழமை அன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆஸ்திரேலியா தொழில் நிறுவன உறவுமுறை கட்டமைப்பை மாற்றி அமைப்பதின் ஒரு பகுதியாகும்.
இந்த சட்டத்தின்கீழ், திட்டமிட்டே குறைவான ஊதியம் வழங்கும் முதலாளிகளுக்கு 4 வருடம் சிறை மற்றும் $1.1 மில்லியன் அபராதம் விதிக்கப்படும். தொழில்நிறுவனங்கள் $5.5 மில்லியன் அபராததொகையினை செலுத்த நேரிடும்.

திட்டமிட்டே பணியாளர்களை சுரண்டும் முதலாளிகளிடம் இருந்து பணியாளர்களை இந்த சட்டம் பாதுகாக்கும் என்று Attorney-General Christian Porter கூறுகிறார். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவினை மீட்பதில், தடையினை உண்டாக்கும் இந்த சட்டத்தில் உள்ள பிரச்சினையை சரிசெய்யும் முயற்சி, இதன் வழிமுறையில் உள்ளது.

முதலாளிகள் மற்றும் தொழிற்சங்களுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்திற்கு பின்பு இந்த சீர்திருத்தங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்தன. குற்றம் சுமத்தப்பட்ட முதலாளிகள் 5 வருடம் தொழில் நிறுவனங்களை நிர்வகிப்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். முதலாளிகளின் இந்த சட்ட விதிகளை பின்பற்றுவதை அதிகப்படுத்தும் முயற்சியாக இந்த அபராதம் விதிப்பது அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட விதியை மீறுவதற்கான அபராத தொகையை 50% அதிகப்படுத்துவதை பற்றியும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

பகுதி நேர பணியாளர் வேலைவாய்ப்பு

நிரந்தர பகுதி நேர பணியாளர்கள், தாங்கள் அதிக நேரம் பணியாற்றியதற்கான ஊதியம் வழங்கப்படாததைப் பற்றியும் இந்த சட்டம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும். அதிகநேரம் உழைப்பதில் விருப்பம் இருந்தாலும் பல பணியாளர்கள் அதற்கான ஊதியம் கிடைக்காததால் அதை செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சி எடுக்கப்படும்.

இந்த சட்ட சீர்திருத்தம், நிரந்தரமாக பணியாளர்களை நியமிப்பதில், தொழில்நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் Mr Porter தெரிவித்துள்ளார். அரசினால் முன்மொழியப்பட்ட பகுதி நேர பணியாளர் சட்ட சீர்திருத்தங்கள் பற்றி தாங்கள் மிகவும் விழிப்புடன் இருக்கின்றோம் என்று Labor’s industrial relations spokesperson Tony Burke தெரிவித்தார்.

இதற்கு முன்னால் பார்த்திராத சட்டமாக இருந்தாலும், நல்ல சம்பளத்தோடு பாதுகாப்பான வேலையினை கொடுக்க சட்டம் செய்யத்தவறினால் நாங்கள் எதிர்ப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான வேலைகளை உருவாக்குவதில் தவறவிட்ட வாய்ப்பாகவும் மற்றும் பணியாளர் உரிமைகளை பறிப்பதாக இருப்பதால் ,இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக ACTU secretary Sally McManus எச்சரிக்கை விடுத்துள்ளார்.