Breaking News

அமெரிக்கத் தேர்தல் ரகசியங்கள் எவ்வாறு வெளிவந்தது? ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் அதிருப்தி !

வாக்காளர் மோசடி, முடிவு வெளிவருவதற்கு முன்பே வெற்றி என்று வெளிவந்த பல குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து அமெரிக்காவின் தேர்தல் குறித்து ஆஸ்திரேலியா அரசியல்வாதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அமெரிக்க தேர்தலில் மோசடி என்று ட்ரம் குறித்து வெளிவந்த செய்திக்கு ஆஸ்திரேலியா அரசியல்வாதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகக் கட்சி Bidenக்கு எதிராக பொய்யான தகவல்களை கூறி, ஆதரவற்ற கருத்துக்களை வெளியிட்ட பின்னர் ,ஒவ்வொரு வாக்குகளும் கணக்கிடப்படும் என்று தான் நம்புவதாக Foreign Minister Marise Payne கூறினார்.

இந்த பிரச்சினைகளை எதிர்த்து தனது வழக்கறிஞர் போராடுவார் என்று Mr Biden கூறினார் , மேலும் அமெரிக்கர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொழில் கட்சியின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் Penny Wong , Trump-பின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக கவலை தெரிவித்தார். ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.இந்தத் தேர்தலில் அமெரிக்கர்கள் வரலாற்று காணாத அளவிற்கு வாக்களித்துள்ளனர் என்று தொழிற்கட்சி Senator Penny Wong கூறினார்.

முன்னாள் prime minister Malcolm Turnbull “ஒவ்வொரு வாக்குகளையும் கணக்கிடவேண்டும் ” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Liberal MP மற்றும் முன்னாள் diplomat Dave Sharma-வும் ஜனநாயக வழிமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும்,எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு ஜனநாயக தலைவராக இருப்பது என்பது வாக்காளர்களின் முடிவை மதித்தல், செயலின் புனிதத்தன்மை மற்றும் தேவைப்படும்போது அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதற்கு உதவுதல்” போன்ற பல விஷயங்களை பொறுத்து தான் அமையும் என்றும்,பொறுமை மற்றும் பணிவு இரண்டும் தேவையான நல்லொழுக்கங்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

தொழிற்கட்சியின் சுகாதார செய்தித் தொடர்பாளர் Chris Bowen பதிவிட்டுள்ள ட்விட்டில் “வளரும் ஜனநாயகம் என்றால் – ஆஸ்திரேலிய அரசாங்கம் ,ஆட்சியை மதிக்கக் வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Greens Leader Adam Bandt இந்த சர்ச்சையை குறித்து கூறுகையில் “தவறான கருத்துக்களுக்கு Prime Minister Scott Morrison துணை போகக்கூடாது என்று கூறியுள்ளார்.மேலும் தேர்தல் சர்ச்சைகள் முழுமையாக முடியும் வரை ஆஸ்திரேலியர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் சூழ்நிலையில் ,குற்றச்சாட்டுகள் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.