Breaking News

நியூ சிட்னியில் கொரோனா எச்சரிக்கை இடங்கள் அறிவிப்பு !

சிட்னியின் தென்மேற்கில் உள்ள உடற்பயிற்சி கூடம் உட்பட இரண்டு இடங்களுக்கு NSW Health பொது சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 15 நாட்களில் Leppington-ல் உள்ள F45 ஜிம்மில் குறிப்பிட்ட நேரத்தில் பயிற்சி செய்தவர்கள் நெருங்கிய தொடர்பாக கருதப்படுகிறாரகள்.முடிவை பொருட்படுத்தாமல் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Auburn-ல் உள்ள Ali Baba Charcoal Chicken-னுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 4-5 மணி முதல் இங்கு வந்தவர்கள் casual contact-ஆக கருதப்பட்டு அறிகுறிகள் கண்காணிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

உள்ளூரில் வந்த மூன்று தொற்றுகளும் ஒரே வீட்டிலிருந்து வந்ததாக NSW Premier Gladys Berejiklian தெரிவித்தார்.புதன் இரவு 8 மணியளவில் 14,230 சோதனைகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 14,382 சோதனைகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் தொற்று சிட்னியில் இருந்து வந்ததாக NSW Health தெரிவித்துள்ளது. நோய் தொற்றின் மூலம் இன்னும் விசாரணையில் உள்ளது.
மற்ற மூன்றும் அந்த வீட்டில் அல்லது அதன் தொடர்பில் வந்தவை. அவர்களில் ஒன்று பொது சுகாதார எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சமீபத்தில் சிட்னி முழுவதும் பார்வையிட்டுள்ளார். WestField Bondi Junction மற்றும் Trampoline Park போன்ற உணவகங்கள்.பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் கலந்து கொண்டுள்ளார். அச்சமயம் அங்கு பார்வையிட்டவர்கள் அறிகுறிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று NSW Health தெரிவித்தது.

Bondi WestField உட்பட ஆறு இடங்களை NSW அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அதில் சிட்னி மேற்கில் உள்ள Flip Out Prestons Trampoline Park மற்றும் தென்மேற்கில் உள்ள Liverpool-ல் உள்ள Jasmins Lebanese உணவகம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

ஞாயிறன்று இந்த இடங்களில் குறைந்தது ஒரு மணி நேரம் இருந்த அனைவரும் சோதனைகள் மேற்கொண்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது .