Breaking News

தேசிய கீதத்தை மாற்ற அதிகளவில் மக்கள் ஆர்வம் !

வளர்ந்து வரும் அரசியல் தலைவர்கள் பலர் தேசிய கீதத்தில் 60,000 ஆண்டுக்கால சுதேச வரலாற்றைச் சிறப்பாக பிரதிபலிப்பதற்கான அழைப்புகளை ஆதரிக்கின்றனர், ஆனால் மற்றவர்கள் இதை ஏற்கவில்லை என்பது தெரிகிறது.

சுதேச ஆஸ்திரேலியா மக்களின் வரலாற்றைச் சிறப்பான முறையில் பிரதிபலிக்கும் வன்னம் தேசிய கீதம் மாற்றப்பட வேண்டும் என்ற அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஆதரவாகப் பல அரசியல்வாதிகளும் இந்த வாரம் தங்களது கருத்துக்களை வழங்கியுள்ளனர். பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவின் சாதனைகள் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலிய தேசிய கீதத்தின் முதல்வரியைத் திருத்துவதற்கு, பூர்வீக ஆஸ்திரேலியர்களுக்கான அமைச்சர் Ken Wyatt, தொழிலாளர் தலைவர் Anthony Albanese மற்றும் NSW Premier Gladys Berejiklian ஆகியோர் NAIDOC வார நிகழ்ச்சியில் குறிப்பிட்டு உள்ளனர் .

ஆஸ்திரேலிய தேசியகீதத்தை மாற்ற நினைப்பவர்கள் யார்?

பழங்குடிமக்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை அங்கீகரிக்கத் தவறியதால் தேசிய கீதம் சில ஆஸ்திரேலிய மக்களுக்கு நீண்டகாலமாக ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. ஆஸ்திரேலிய தேசிய கீதத்தை புறக்கணிப்பதைப் பற்றி சில விளையாட்டு வீரர்கள் பேசுவதோடு, சேர்ந்து பாட வேண்டாம் என்ற அவர்களின் முடிவு விளையாட்டுப் போட்டிகளின் போது அதிருப்தி உண்டாக்குகிறது. மேலும் கடந்த வாரம் நடந்த NRL State of Origin தொடரின் தொடக்கத்தின் போது ஏராளமான வீரர்கள் தேசியகீதம் பாடியபோது அமைதியாக இருந்தனர்.

இந்த மாற்றம் குறித்த ஆலோசனையை நான் ஆதரிப்பேன் என்றும் தேசிய கீதத்தின் வரியை மாற்றுவதர்க்கு ஆதரவு தெரிவிப்பதாக, Mr Wyatt ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும், இது “மிகவும் நடைமுறையான பரிந்துரை” என்றும் பழங்குடிமக்களுடன் இந்த உலகத்தின் மிகப்பழமையான, தொடர்ச்சியான நாகரிகம் எங்களிடம் உள்ளது என்பதில் பெருமைப்பட வேண்டிய நாடு என Mr Albanese தெரிவித்தார்.

தேசியகீதத்தை மாற என்ன செய்ய வேண்டும்?

ஆஸ்திரேலிய தேசியகீதத்தின் மாற்றம் முதல் தடவையானது அல்ல, ஏனெனில் 1984 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய தேசியகீதம் பெண்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதால் அப்போதைய பிரதம மந்திரி Bob Hawke தனது நிர்வாக அதிகாரங்களின் உதவிமூலம் “ஆஸ்திரேலியாவின் மகன்களே வாருங்கள் மகிழ்ச்சியடைவோம்” என்பதை “ஆஸ்திரேலியா மக்களே அனைவரும் வாருங்கள் மகிழ்ச்சியடைவோம்” என்று ஆஸ்திரேலிய தேசிய கீதத்தின் முதல் வரியாக மாற்றினர்.

தற்போதைய ஆஸ்திரேலியா தேசியகீதத்தில் மாற்றம் இதைப்போன்ற “எளிய செயல்முறையை” பின்பற்றலாம் என்று கீதம் திட்டத்தின் நிருபரும் தலைவருமான, முன்னாள் Victoria உச்சநீதிமன்ற நீதிபதியுமான Peter Vickery கூறினார். அல்லது, இது பாராளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டிய சட்டமாகக் குறிப்பிடப்படலாம் என்று அவர் கூறினார்.

மாற்றத்தை எதிர்ப்பவர்கள் யார்?

தற்போதைய ஆஸ்திரேலிய தேசியகீதம், Advance Australia Fair, 1878 ஆம் ஆண்டில் Peter Dodds McCormick எழுதியது, அந்நேரத்தில் God Save the Queen தேசிய கீதமாக இருந்தது. ஆனால் அப்பாடல் தேசிய கீதமாகமாறுவதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும். ஏனெனில் 1974 இல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளைத்தொடர்ந்து, 1976 ஆம் ஆண்டில் God Save the Queen மீண்டும் நிலை நிறுத்தியது, மேலும் 1977 இல் மற்றொருவாக்கெடுப்பு எடுக்கப்பட்டு 1984 இல் ஏற்று கொள்ளப்பட்டது.

“ஆஸ்திரேலியா தேசிய கீதம் ஆஸ்திரேலியா மக்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேசிய கீதத்தின் சொற்களும் பாடலும் ஆஸ்திரேலியாவின் Governor-General 1984 ஏப்ரல் 19 அன்று தேசிய கருத்து பற்றிய விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு, 1970களில் தொடங்கி அறிவிக்கப்பட்டது,” என்றும் “இந்த முக்கியமான தேசிய சின்னத்தை மாற்றுவதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திற்கு இல்லை. இருப்பினும், பரந்த சமூகத்தில் இந்த விஷயங்களைப் பற்றிய விவாதம் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் ஒரு முக்கிய பகுதியாகக் கொண்டாடப்பட வேண்டும்.” என்றும் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர்கள் சில ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

இந்நல்லிணக்கம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஆஸ்திரேலிய தேசியகீதத்தின் விவாதம் ஒரு வார்த்தையை மாற்றுவது மூலம் ஒரு குறியீட்டு நல்லிணக்கமுயற்சிக்குச் சமமானதா என்ற கேள்விகளைத் தூண்டியுள்ளது.

Labor Senator Malarndirri McCarthy, a Yanyuwa கூறியிருப்பதாவது,

“நாங்கள் ஒட்டுமொத்தமாகத் தேசிய கீதத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவதைப் பார்க்க விரும்புகிறேன், ஒரு தேசமாக, நாம் எந்த வகையான கீதத்தை விரும்புகிறோம்,என்றும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றம் பழங்குடிமக்களைச் சேர்ப்பது குறித்து ஒரு பெரிய விவாதத்தை நோக்கி ஒரு “முக்கியமான படியாகும்” என்றும் Yanyuwa பெண்ணான Labor Senator Malarndirri McCarthy தெரிவித்துள்ளார்.

“தேசிய கீதம் என்பது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்று” என்றும் “எல்லோரும் பெருமையுடன்பாடக்கூடியதாகவும்”, முன்மொழியப்பட்ட மாற்றம் ஒற்றுமையைச் சரி செய்யத் தொடங்க உதவும் என்றும் Wiradjuri பெண்ணான Labor MP Linda Burney தெரிவித்தார் .

“இந்நாட்டில் பழங்குடியின மக்களின் உரிமைகள் ஒருபோதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை,” என்றும் “இந்நாடு முன்னேறி முதிர்ச்சியடைய விரும்பினால், பழமையான, தொடர்ச்சியான வாழ்க்கை கலாச்சாரம், பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவு மக்கள், இந்த நாட்டின் அடையாளத்தின் உண்மையான பகுதியாக இருக்க வேண்டும்.” என்றும் “ஒரு வார்த்தை” ஒருபோதும் பழங்குடி மக்களுக்கு உண்மையான வித்தியாசத்தை வெளிப்படுத்தாது என்றும் Gunnai மற்றும் Gunditjmara பெண்ணான Greens Senator Lidia Thorpe தெரிவித்துள்ளார்.