Breaking News

இந்த கோடையில் ஆஸ்திரேலியர்கள் மிக பெரிய வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

கடந்த கோடையில் pushfire காரணமாக நாடு மிகப்பெரிய அழிவை எதிர்கொண்டது. இந்த கோடையில் மிகப்பெரிய வெள்ளத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.நாட்டின் வெப்பநிலை 1910 ஆம் ஆண்டில் இருந்து இப்பொது வரை 1.44 டிகிரி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் வெப்பநிலையானது சாதனை படைத்தது விட்டது.

pushfireக்கு உள்ளான ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் இன்றுவரை வறண்டு காணப்படுகிறது. அந்த பகுதிகளில் ஏப்ரல் முதல் அக்டோபர் பருவமழையானது குறைந்துவிட்டது.

வெப்பநிலை மற்றும் உலர்ந்த கலவையானது pushfire பருவங்களை மோசமாக்குவதற்கான சரியான செய்முறையாகும். வெப்பநிலை மற்றும் மழையின் மாற்றமானது ஓரளவு வெப்பமான வானிலையை உருவாக்குகிறது, என வானிலை மற்றும் சுற்றுசூழல் கண்காணிப்பு மேலாளர் Karl Braganza கூறினார்.பொதுவாக ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதிகளில் அதிகமான வெப்பமான வானிலை நிலவுகிறது .

இந்த கடந்த கால பருவநிலை மாற்றங்களே ஆஸ்திரேலியாவின் தெற்கு,மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட pushfireக்கு காரணம். ஆனால் இந்த கோடையில் நாட்டின் பெரும்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படும், கடந்த கோடைகாலத்தில் மிகுந்த வெப்பம் மற்றும் வறட்சியான சூழ்நிலையை நாம் கொண்டிருந்தோம், இப்பொது பசுபிக் பகுதியில் La Nina விளைவுகளை கொண்டுள்ளோம் என கூறினார்.

La Nina நிகழ்வுகள் ஆஸ்திரேலியாவுடன் அதிக மழை மற்றும் வெள்ளத்தோடு தொடர்புடையவை. La Nina நிகழ்வினால் 2010-11 ஆம் ஆண்டு பரவலான மழை மற்றும் யாசி சூறாவளியினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த La Nina நிகழ்வினால் ஆஸ்திரேலியாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவை நாம் காணலாம். எனினும் இந்த நிகழ்வு கடுமையானதாக இருக்காது, இது ஆஸ்திரேலியாவை சுற்றி கடல் மேற்பரப்பு எவ்வளவு வெப்பமடைகிறது என்பதை பொறுத்தது என கூறினார்.

1910 ஆம் ஆண்டில் இருந்து நாட்டின் நீர்ப்பரப்பில் 1 டிகிரி வெப்பமடைந்துள்ளது. 1880 முதல் ஆஸ்திரேலியாவின் கடல் மட்டம் 25 செ.மீ உயர்ந்துள்ளது. இது 1970களில் பாதியாகும். இது மேலும் 3.5 செ.மீ உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை உயர்வு மற்றும் பனிக்கட்டிகள் உருகுவது இந்த இரண்டு விஷயங்கள் கடல் மட்டங்கள் அதிகரித்து வருவதற்கு காரணமாக இருக்கலாம், என CSIRO வின் காலநிலை அறிவியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் Jaci Brown கூறினார்.

covid-19 காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள், நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன இவைகள் carbon dioxide signal க்கு என்ன செய்தது என கூறினார். மேலும் வளிமண்டல carbon dioxide அதிகரித்துள்ளதை நாங்கள் காண்கிறோம். இது நீண்ட கால மாற்றத்தை பற்றியது மேலும் இதை சரி செய்வது சவாலான ஒன்றாகும் என கூறினார்.

Gavin Fernando வின் கூடுதல் அறிக்கையுடன் அடுத்த காலநிலை அறிக்கை 2022ல் வெளியிடப்பட உள்ளது.