Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் நோய் தொற்றுக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் Premier தெரிவித்தார் !

நோய் தொற்றுக்கு எதிராக பெருமளவு புதிய கட்டுப்பாடுகள் இன்று இரவு முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. Adelaide-ல் நோய் தொற்று அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 17 நோய் தொற்றுகள் கண்டறியப்பட்டது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒரே இரவில் 17 பேருக்கு நோய் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது அதனால் Premier Steven Marshall புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

செவ்வாய் நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு உடற்பயிற்சி கூடம், pubs , விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை மூடப்படும் என்று கூறியுள்ளார்.
சமூக விளையாட்டு சாதனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. துவக்க முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்தார்.

குறைந்தது 50 பேர் மட்டுமே இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும்.தலா ஒருவருக்கு நான்கு சதுர மீட்டர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.தேவாலயங்களில் குறைந்தது 100 பேர் கலந்து கொள்ளலாம்.விடுதிகள், உணவகங்கள் குறைந்தது 100 பேர் கலந்து செயல்படலாம்.

திருமண விழாக்களில் குறிப்பிட்ட நபர்களே கலந்து கொள்ள வேண்டும்.பள்ளிகள் திறந்திருக்கும்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் மாநில அதிகாரிகள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இன்னும் சில வாரங்களுக்கு சர்வதேச விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுகாதாரத்துரை அதிகாரி Nicola Spurrier புதிய நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

நவம்பர் 16, 2020 சனிக்கிழமை அன்று 80 வயது மதிக்கத்தக்க பெண்மணிக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே குடும்பத்தை சேர்ந்த மேலும் இருவருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

உணவு விடுதிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு உடனடியாக கொரோனா சோதனை நடத்தப்படவுள்ளது.

நோய் தொற்று பரவாமல் தடுக்க ஐந்து மாநிலத்தின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

Queensland, Victoria, Tasmania, Northern Territory, Western Australia,தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பயணிகள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.

நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவே எல்லை சரியான நேரத்தில் மூடப்பட்டுள்ளது என்று Scott Morrison திங்கள் அன்று தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ்க்குள் எல்லைகள் திறந்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மற்ற எல்லா நாடுகளையும் விட ஆஸ்திரேலியா நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
கூடிய விரைவில் நோய் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம் என்று அறிவித்தார்.

கடந்த 17 நாட்களாக எந்தவித மரணமோ நோய் தொற்றோ Victoria வில் கண்டறியவில்லை.
நோய் தொற்றின் இரண்டாவது அலையை தடுக்க மாநிலங்கள் முடக்கி வைத்திருப்பதற்கு மாநில அரசுக்கு Mr. Hunt புகழாரம் சூட்டினார்.