Breaking News

Morrison அரசாங்கம் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசிகளை பாதுகாக்க சுமார் $1பில்லியன் செலவு செய்கிறது !

காய்ச்சல் தடுப்பூசிகள் மற்றும் antivenomகளை பாதுகாப்பதற்கு மத்திய அரசு சுமார் $ 1 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

வரும்காலங்களில் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும்,ஆஸ்திரேலியாவின் மிக ஆபத்தான உயிரினங்களுக்கு antivenoms வழங்கவும் Melbourne இல் புதிய தடுப்பூசி ஆலை கட்டப்படும். காய்ச்சல் மற்றும் influenza தடுப்பூசிகளை நீண்ட காலத்திற்கு பாதுகாத்துக்கொள்ள, CSL துணை நிறுவனமான Seqirus-வுடன், 12 ஆண்டுகளுக்கு சுமார் $1 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனமானது Melbourne விமான நிலையம் அருகே உள்ள 60 ஆண்டுகள் பழமையான parkville பகுதியில் உயர்தர
தடுப்பூசி ஆலையை நிறுவ சுமார் $ 800 மில்லியன் முதலீடு செய்யும்.

 இது குறித்து ,Prime Minister  Scott Morrison கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக கடந்த வாரம் ஒப்பந்தம் செய்யப்பட்டது  என கூறினார். இந்த ஒப்பந்தம் Covid-19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்வது என்று கடந்த திங்களன்று கூறியிருந்தார். மற்றொரு தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி உற்பத்தி திறன் முக்கியமான ஒன்றாகும். 

இது உலகெங்கிலும் ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளின் பொதுவான விவாதமாகும், முக்கியமான பகுதிகளில் விநியோகிக்க உற்பத்தியை அதிக படுத்த வேண்டியுள்ளது. தடுப்பூசிகள் மற்றும் இன்னும் முக்கியமானவைகள் இருக்கும் என்று Scott Morrison கூறினார்.

சுகாதார அமைச்சர் Greg Hunt கூறுகையில் இந்த Anti-venom taipans,tiger snakes, brown snakes, box jellyfish மற்றும் stonefish விஷஎதிர்ப்பாக பயன்படுத்தலாம் என கூறினார். அடுத்த ஆண்டில் இந்த ஆலையின் பணிகள் தொடங்கி 2026 ஆம் ஆண்டு பாதியில் இருந்து செயல்படும், மேலும் இது 500 க்கும் மேற்பட்ட வேலைகள் உருவாக்கபடும் என்று கூறினார்.

Seqires உடனான இந்த ஒப்பந்தம் 2024/25 ஆம் ஆண்டில் காலாவதியாகிவிடும். இது ஆஸ்திரேலியாவை வெளி நாடுகளில் இருந்து மருத்துவ தயாரிப்புகளை பெறவைக்கும் ஆபத்தை உருவாக்கும். இந்த புதிய ஒப்பந்தம் 2036 வரை இயங்கும். ஆஸ்திரேலியாவில் influenza மற்றும் Q காய்ச்சல்களுக்கு தடுப்பூசிகள் தயாரிக்கும் ஒரே நிறுவனம் Seqires ஆகும். உலகில் வேறு எந்த ஒரு நிறுவனமும், ஆஸ்திரேலியாவில் இருக்கும் 11 வகையான நச்சுத்தன்மை கொண்ட பாம்புகள், கடல் உயிரினங்கள் மற்றும் சிலந்திகளுக்கு எதிராக
Anti-venom உற்பத்தி செய்யவில்லை.