Breaking News

ஜப்பானுக்குச் சென்ற Scott Morrison-கோரிக்கை வைத்த ஆஸ்திரேலியா மக்கள் !

இந்த ஆண்டின் முதல் அலுவல் பணி காரணமாக வெளிநாட்டுப் பயணத்திற்க்கு செவ்வாய்க்கிழமை காலை ஜப்பானின் Tokyo-விற்குப் Scott Morrison சென்றார், இதனால் ஜப்பானின் Prime Minister Yoshihide Suga – சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும் இச்சந்திப்பால், ஜப்பானில் சிக்கிக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா மக்களிடையே தங்ளை எப்போது தாய்நாட்டிற்கு அனுப்புவார்கள் எப்போது தங்களது குடும்பத்தைச் சந்திப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Melbourne-க்கு பாதுகாப்பாக வர ஏதாவது ஒரு அதிசயம் நடக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்றும் ஜப்பானில் உள்ள தனது கணவர் Yusuke Nemoto மற்றும் ஆறு வயது மகன் Lars ஆகியோருடன் மீண்டும் சேர்வதற்கு முயன்று வருவதாக Melbourne-னை சேர்ந்த Nadia Campbell ஒரு தனியார் ஊடகத்துக்குத் தெரிவித்தார்.

ஜப்பானுக்கு Scott Morrison சென்றது ஏன்?

இத்தொற்று நோய்களின் நேரத்தின் போது ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களில் நானும் ஒருவன், இது வழக்கமானது அல்ல என்றும் மேலும் ஜப்பான் ஆஸ்திரேலியாவுடன் கொண்டுள்ள உறவு ஒரு பொருளாதார, வர்த்தக, கலாச்சாரம் மற்றும் சமூகமான உறவு மட்டுமல்லாமல் ஒரு முக்கியமானதாகும் என்றும் ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதட்டங்களை இருதலைவர்களும் கலந்துரையாடி இரு நாடுகளிடையே ஒரு அமைதிக்கான ஒப்பந்தம் வகுக்கும் முயற்சி நடைபெறுகின்றது என்று Scott Morrison பதிலளித்தார்.

இதை என்னால் நம்பமுடியவில்லை

ஒரு உலகப்பயனத்தை தனது மனைவியுடன் தொடங்கிய மேற்கு ஆஸ்திரேலியா குடிமகனாகிய Leigh Dearle இத்தொற்று நிலைமை காரணமாக விமான சீட்டுகள் ரத்து செய்யப்பட்டும், திரும்பிச் செல்ல பணம் இல்லாத நிலையிலும், தங்களது தாய்நாடே தங்களைக் கைவிட்ட நிலையில் ஜப்பானில் மாட்டிக்கொண்ட இவர், Mr Morrison-னின் இவ்வெளிநாட்டு பயணச்செய்தியை கேள்விப்பட்ட இவர் இதை நம்ப முடியவில்லை என்று அதிர்ச்சி அடைந்தார்.

விமான சீட்டுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா திரும்பிச் செல்லப் பயணச்சீட்டின் விலை 8,700 டாலர்களாக உயர்ந்துள்ளதாகவும், எங்களைப் போன்ற சாதாரண மக்களால் அதை வாங்க முடியாது என்றும். இப்பொழுது இருக்கும் தொற்று நிலையில் video conference மூலம் சந்திக்காமல், ஜப்பான் Prime Minister-ஐ நேரில் வந்து சந்திக்க பெரிய காரணம் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை என்று ஜப்பானில் மாட்டிக்கொண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சர்வதேச ஆசிரியர்கள் Kate மற்றும் Nick Holywell தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர் .

மனித உரிமை மீறல்

வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களை தனிமைப்படுத்தும் திறன்கொண்ட விடுதிகள் மிகக்குறைவாக உள்ளதாகவும் மேலும் திரும்பி வரும் பயணிகள் மூலம் COVID-19 பரவாமல் தடுப்பதில் தனிமைப்படுத்தும் திறன்கொண்ட விடுதிகள் மிகப்பெரிய பங்களிப்பதாகவும் ,ஆஸ்திரேலியா மத்திய அரசு தெரிவித்துள்ளது. திரும்பி வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்படும் ஏற்பாடுகளை விரிவுபடுத்த உதவுவதற்காக அரசாங்கம் சமீபத்தில் Darwin-இல் உள்ள Howard Springs தனிமைப்படுத்தப்படும் வசதியையும் திறந்தது.

தனிமைப்படுத்தப்படும் இடங்களில் அதிக முதலீடு செய்வதோடு, வீட்டில் தனிமைப்படுத்தப்படும் ஏற்பாடுகளை விரிவாக்குவதை அரசாங்கம் கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தப்படும் திட்டத்தை வேகமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும். இல்லையென்றால் இது வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற ஆஸ்திரேலியா மக்களுக்குச் செய்யும் அநீதி என்றும், இது அவர்களின் மனித உரிமை மீறல் என்றும் Amnesty International campaigner Joel McKay எச்சரித்துள்ளார்.