Breaking News

ஆரம்ப எச்சரிக்கை அறிவிப்பு -Adelaide-ல் 5 புதிய நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது !

Adelaide-ல் 5 புதிய நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதனால் தெற்கு ஆஸ்திரேலியர்களுக்கு சோதனைகள் துரிதப்படுத்தப்படுகிறது .

சுகாதாரத்துறை அதிகாரிகள் வடக்கு Adelaide-ல் மக்களை சோதனை செய்து கொள்ளும்படி கூறியுள்ளார்கள்.

Brompton Anglicare விதிவிலக்கான தேவைகள் , பராமரிப்பு இல்லம் பழைய தெற்கு ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்ற ஆதரவை வழங்கியது.
கிட்டத்தட்ட 4000 மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று Chief Public Health Officer Dr. Spurrier கூறியுள்ளார்.

நவம்பர் 14 காலை 11க்கு பிறகு மதியம் 1.30 மணியளவில் யாரெல்லாம் Elizabeth Aquadome நீச்சல் குளம் மையத்தில் இருந்தார்களோ 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்தப்படுத்தி கொள்ளுமாறும் சோதனை செய்து கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளனர்.

நோய் தொற்று உள்ளவர்கள் உணவு விடுதிகளில் தங்கி இருந்த போது ஊழியர்களுக்கு பரவி அவர்கள் மூலம் நோய் தொற்று பரவியது விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது என்று Premier Steven Marshall தெரிவித்தார்.

Adelaide Peppers விடுதியில் தங்கி இருப்பவர்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் வேறு இடம் பார்த்து செல்லவேண்டும் என்று மாநில அரசு தெரிவித்தது. அவர்கள் இன்னும் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கூறி உள்ளனர் .மருத்துவ விடுதிகள் எதிர்காலத்தில் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இரண்டாம் அலை ஆரம்பம் ஆன நிலையில் தெற்கு ஆஸ்திரேலியர்கள் சோதனை செய்து கொள்ளும்படி கூறியுள்ளனர். Adelaide-ல் அங்காடிகளில் எல்லா பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டு வெற்று இடமாக வைத்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் ஒரேயொரு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று Mr. Marshall தெரிவித்தார்.நூற்றுக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர், இருந்தும் ஒரு புதிய நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Mr.Mcgowan சரியான விஷயங்களை தகுந்த நேரத்தில் எடுத்தமைக்கு Steven Marshall பாராட்டி உள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து எல்லோரும் ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து
பள்ளிகள் சுத்தம் செய்வதற்காக மூடப்பட்டுள்ளது. மற்ற நோய் தொற்று உள்ளவரிடம் தொடர்பில் இருந்தால் நீங்களே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 3000 மக்கள் தங்களை சோதனைக்கு உட்படுத்தி கொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரி Nicola Spurrier தெரிவித்தார்.

சளி ,இருமல் தொந்தரவு மற்றும் நோய் தொற்றின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சோதனை செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக எல்லைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.