Breaking News

சர்வதேச அளவில் போர்க்குற்றங்களை பற்றிப் பேசுவதில் ஆஸ்திரேலியா ‘முன்மாதிரியாக’ இருக்க வேண்டும்- மனித உரிமை வலியுறுத்திகிறது

சிறப்புப் படை வீரர்களால் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் குறித்து ஆஸ்திரேலியாவின் நீண்டகால விசாரணையை, மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள, பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆப்கானிய 39 பொதுமக்கள் அல்லது கைதிகள் சட்ட விரோதமாக கொலை செய்யப்பட்டதற்கான “நம்பகமான” ஆதாரங்களும். அதன் கண்டுபிடிப்புகள் ஆஸ்திரேலியாவின் இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது, என்றும் விசாரணை நடத்திய Major General Paul Breton கூறியுள்ளார்.

இரத்தவெறி, சட்டவிரோதம் மற்றும் இரகசியத்தின் கலாச்சாரம்

2005 முதல் 2016 வரையிலான விசாரனையில் வெளிவந்த போர்க்குற்றங்கள் பற்றிய வதந்திகளை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ள Brereton, விசாரணையில் அமெரிக்கக் கூட்டணியின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா 2002 முதல் ஆப்கானிஸ்தானில் இரானுவப்படையை கொண்டுள்ளது என்றும். ஆப்கானியர்கள் சட்டவிரோதமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 39 குற்றச்சாட்டுகள் மற்றும் 23 சம்பவங்கள் “கொடூரமான நடவடிக்கை” என்று இரண்டு குற்றச்சாட்டுகளை விவரித்தார் Defence Chief General Angus Campbell.

“ஆஸ்திரேலியாவின் விஷயத்தில், காட்டு மிராண்டித்தனமான செயலை எதிர்கொள்வதன் மூலம் நாங்கள் உண்மையில் முன்னிலை வகிக்கிறோம்,” என்றும் “தங்களது சொந்த பிழைகளை வெளிப்படுத்தத் தயாராக உள்ள நாடுகள் மிகக் குறைவு. என்றும் ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிபுணர் பேராசிரியர் John Blaxland சில ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

‘இது ஆஸ்திரேலியா சிறப்புப் படைகள் மட்டுமல்ல’

“ஆப்கானிஸ்தானில் இந்த வகையான கொடூரச்செயல்கலை மேற்கொண்டது ஆஸ்திரேலியா சிறப்புப் படைகள் மட்டுமல்லாமல் இங்கிலாந்து, அமெரிக்கா, மேலும் பல நாடுகள் கணக்கில் வைக்கப்பட வேண்டும்.” என்றும் ஆஸ்திரேலியா மனித உரிமை கண்காணிப்பு இயக்குநர் Elaine Pearson ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

“ஆப்கானிஸ்தானில் சர்வதேச troops இருந்த ஆண்டுகளில் குற்றங்களின் அளவு மற்றும் அது எவ்வளவு பரவலாக உள்ளது என்பது குறித்து பொது விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை” ஆனால் துரதிர்ஷ்டவசமாகச் சில சம்பவங்களுக்குப் பிற நாடுகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறைந்தபட்சமாக உள்ளது என்றும் அதை நாங்கள் வன்மையாகக் கண்டிருக்கிறோம் என்று ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அமைப்பின் நிர்வாக இயக்குநர் Jawad Zawulistani ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

UK மற்றும் US தோல்விகளிலிருந்து ஆஸ்திரேலியா பாடம் கற்க வேண்டும்:

“இந்தக் கொடூரச்செயல்களுக்கு பொறுப்பேற்க ஆஸ்திரேலியா ஒரு முன்மாதிரியாக இருக்க வாய்ப்பு உள்ளது” என்றும் “மேற்கொள்ளப்படும் இந்த விசாரணைகள் முற்றிலும் சுயமானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் இறுதியில் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர்களுக்கு விசாரிக்கும் திறன் உள்ளது.” என்றும் UK மற்றும் US தோல்விகளிலிருந்து ஆஸ்திரேலியா பாடம் கற்க வேண்டும் என்று Ms Pearson ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.