Breaking News

இரண்டு மாதத்தில் ஐந்து மரணங்கள் ஏற்பட்ட பிறகு ,பாதுகாப்பற்ற நிலையை கூறும் உணவு விநியோக தொழிலாளர்கள் !

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களில ஐந்து இறப்புகள் ஏற்பட்டுள்ளது .அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் உணவு விநியோக தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலைகளைக் பற்றி கூறுகிறார்கள்.

காலக்கெடுவை சந்திக்க அவர்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இது தொழில் துறையில் பாதுகாப்பற்ற நடத்தைகள் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று உணவு விநியோக தொழிலாளர்கள் தங்களது கவலையை தெரிவிக்கின்றனர் .

தற்போது உணவு விநியோக தொழிலாளர்கள் தங்கள் பணி நிலைமைகளைப் பற்றி பேசினார்கள்.ஆஸ்திரேலியாவில் இறப்புகள் தொழில்துறையில் புதுப்பிக்கப்பட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

Uber eats-ல் வேலை செய்யும் வங்காளதேசத்து Bijoy Paul சனிக்கிழமை அன்று Sydneyல் உள்ள Rockdale என்ற இடத்தில் கார் விபத்தில் மரணமடைந்தார்.

நான் பல ரைடர்ஸ் மற்றும் அவர்கள் வாட்ஸ் அப்பில் இருக்கிறேன். விநியோகம் மெதுவாக இருந்தால், வேலை இழக்க போகிறார்கள் என்று நிறுவனங்கள் அறிவிக்கும் என்று Alex Rexborough என்ற தொழிலாளி கூறினார் . delivery rider சம்பாதித்து என்ன பயன் உயிரோடு இருக்க வேண்டுமே என்று அவர் கவலையோடு பேசினார்.

பலதரப்பட்ட Appல் வேலை செய்தும் எங்களுக்கு சொர்ப்ப பணமான $ 10 மற்றும் $15 ஒரு மணிநேரத்திற்கு கிடைக்கும் என்று கவலையோடு கூறியுள்ளார்.

இந்த மாதிரி நிறுவனங்கள் அவர்கள் இறந்தாலும் கவலை பட மாட்டார்கள்.கடந்த இரண்டு மாதங்களில் பல நிறுவனங்களை சேர்ந்த ஐந்து டெலிவரி ரைடர்ஸ் இறந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை சமீபத்திய மரணங்களுக்கு ஏதேனும் தவிர்க்க கூடிய அபாயங்கள் பங்களித்திருக்கலாமா என்று பார்க்க NSW அரசாங்கம் ஒரு பணிக்குழுவை தொடங்கியது.

Bijoy Paul’s சகோதரி Shimul Paul, 27 வயதான அந்த பெண் Sydney ல் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.

சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இன்னும் பல தேவைகள் செய்யப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. மேலும் இதை மேம்பட்டுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது .

Federal Industrial Relations Minister Christian Porter ஒவ்வொரு தொழிலாளியும் அவர்களின் வேலைவாய்ப்பு சூழலுக்கு எவ்வாறு மாறினாலும் , பாதுகாப்பான சூழலுக்கான உரிமை இருக்க வேண்டும் என்றும் ,ஒவ்வொரு நாளின் முடிவிலும் பாதுகாப்பாக வீட்டிற்கு வருவதர்கான உரிமை உண்டு என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.