Breaking News

காட்டுத்தீ மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோயுடன் 2020 RemembranceDay service அமைதியாக நடைபெற்றது !

மாபெரும் போரின் முடிவில் 11 ஆவது மாதத்தின் 11 ஆவது நாளில் 11 ஆவது மணி நேரத்தில் மேற்கு முன்னணியில் துப்பாக்கிகள் அமைதியான நாளின் 102 ஆவது ஆண்டு நிறைவை Remembrance day குறிக்கிறது.

1914 முதல் 1918 வரை கிட்டத்தட்ட 62,000 ஆஸ்திரேலியர்கள் இறந்தனர்.

சிட்னியின் சேவையில் கலந்துகொண்ட, தற்போது 100 வயதுள்ள Frank McGovern இந்த நாளில் கலந்து கொண்டார்.”இது என் சக போர்க்கைதிகளை நினைவூட்டுகிறது.போர் முடிவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்னர் ஒரு விமான தாக்குதல் முப்பது பேரை கொன்றதாக அவர் கூறினார்.

Reg Chard 97, இரண்டாம் உலகப் போரின் போது Papua New Guinea-வில் வான்வழிப் பாதைகளை கட்டினார்.
1942 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் பயிற்சி Baker வேலையை விட்டுவிட்டு இராணுவத்தில் சேர்ந்தார்.ஆண்டு சேவையில் கலந்துகொள்வது ஒரு உண்மையான மரியாதை என்று அவர் தெரிவித்தார்.

97 வயதான Joan Mclean இரண்டாம் உலகப்போரின் போது Operations பற்றி ரகசிய தகவல்களை coding மற்றும் decoding செய்வதற்கும் பொறுப்பாக இருந்தார். ஆஸ்திரேலிய விமான பணியின் பெண் பிரிவில் சேர்வதே அவரது குறிக்கோளாக இருந்தது.

ஆஸ்திரேலிய மக்களின் குணங்களே பல நூற்றாண்டு காலமாக அவர்களுக்கு துணை புரிந்துள்ளது. இந்த குணநலனே கொரோனாவில் இருந்து அவர்களை காப்பாற்றும் என Corporal Daniel Keighran தெரிவித்தார்.

போரும், தொற்று நோயும் இனம், பாலினம் வயது ஆகிய பாகுபாடு இல்லாதது. ஆஸ்திரேலியா மிகவும் அதிர்ஷ்டமான நாடு மிகவும் சவாலான காலங்களில் கூட வேறு எங்கும் இருக்க விரும்பவில்லை என Corporal Keighran கூறினார்.

கோவிட் பேரிடரால் இந்த வருட Remembrance Day சிறிய அளவில் நடைபெற்றது. ஆனால் நாடு முழுவதும் போர்கள் மோதல்கள் மற்றும் அமைதி காக்கும் முயற்சிகளில் உயிர் இழந்த ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் ஆஸ்திரேலியர்கள் காலை 11 மணியளவில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.