Breaking News

சீனா உடனான தனது உறவை மீட்க ஆஸ்திரேலியா Joe Biden-ஐ நம்ப முடியாது !

ஆஸ்திரேலியா சீனாவிற்கு இடையிலான உறவு தொடர்ந்து மோசமடைந்து வரும் சூழ்நிலையில், Joe Biden ஜனாதிபதி பதவியை அடைந்தது இரு நாடுகளுக்கும் இடையே உறவை மீட்டெடுக்க உதவும் என நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலை குறித்து புதன் அன்று சீனாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் Geoff Raby National Press Club-ஐ சந்தித்து உரையாடினார்.

வர்த்தகம் மற்றும் கொரொனா தொற்றால் அதிகரித்து வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் Canberraவை அமெரிக்க சார்பாக செயல்படுத்துவதாக Beijing சித்தரிக்க முயன்றுள்ளது.

சீனாவுடனான உறவை சரி செய்ய ஒரு circuit breaker-ஐ Joe Biden நிர்வாகம் வழங்கக்கூடும் என Mr Raby கூறினார்.ஆனால் தலைமை மாற்றம் மட்டுமே பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வராது.

கொரோனா தொற்று குறித்து விசாரணை மேற்கொள்ள சர்வதேச அளவில் Prime Minister Scott Morrison வற்புறுத்தியதை தொடர்ந்து சீனா உடனான உறவு மோசமடைய தொடங்கியது.

மே மாதத்தில் சீனா, ஆஸ்திரேலிய பார்லியின் கட்டணத்தை தாக்கியது மாட்டிறைச்சி இறக்குமதியை நிறுத்தியது.உறவுகளில் முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மூத்த அரசாங்க அமைச்சர்களும் பல மாதங்களாக தங்கள் சீன சகாக்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சீனா ஒரு போட்டியாளராக அல்லது partner-ஆக பார்க்கப்படுகிறதா என்பது குறித்து ஆஸ்திரேலியா ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று
Mr Raby தெரிவித்தார்.