Breaking News

கத்தார் விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய பயணிகளுக்கு நடந்த கடும் பரிசோதனை-கத்தார் அரசு வருத்தம் !

தோஹா விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு Premature குழந்தையை கண்டுபிடித்ததை தொடர்ந்து பல ஆஸ்திரேலிய பெண்கள் கடுமையான பரிசோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

இதனால் அவர்களுக்கு நேர்ந்த துன்பங்களுக்கும்,அத்துமீறல்களுக்கும் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படைந்த்தற்கும் வருத்தப்படுகிறோம் என கத்தார் அரசாங்கம் தெரிவித்தது.இம்மாதிரி கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தப்பிப்பதை தடுக்க இந்த நடவடிக்கை தேவைப்படுவதாக அவர் கூறினார்.

அந்தப் பெண் குழந்தை ஒரு பயங்கரமான கொலை முயற்சியில் இருந்து மீட்கப்பட்டது.விமான நிலையத்தில் குழந்தை பிளாஸ்டிக்கில் மறைத்து குப்பைகளின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவத்தை கண்டித்த வெளியுறவுத் துறை அமைச்சர் Marise Payne , 13 ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஐந்து வெளி நாட்டினர் உட்பட ஆஸ்திரேலியாவுக்குச்செல்லும் விமானத்தில் இருந்து 18 பெண்கள் வெளியேற்றப்பட்டார்கள்.அவர்களில் எத்தனை பேர் பரிசோதிக்கப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.இது தொடர்பாக விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் மிகவும் வருத்தமளிப்பதாக Senator Payne கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விரிவான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என Qatar’s Prime Minister, Khalid bin Khalifa bin Abdulaziz Al Thani தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய பெண்கள் தாமாக ஆஸ்திரேலியன் Federal police-ஐ நோக்கி வந்துள்ளதாக கமிட்டிக்கு தெரிய வந்துள்ளது.

இந்த பரிசோதனைகள் தரமற்றது என்றும் நம்ப முடியாதவை என்றும் Ms Adamson விசாரணையில் தெரிவித்தார்.வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் ஆஸ்திரேலியர்களில் 15 சதவீதம் Qatar Airlines-ல் பயணிக்கிறார்கள். ஆஸ்திரேலியர்களை தம் நாட்டில் சேர்க்கும் பணியில் அவர்கள் முக்கியமான பங்கை வழங்குகிறார்கள் என்று திரு மோரிசன் தெரிவித்தார்.