Breaking News

Zero emissions இலக்கை அடைய ஸ்காட் மோரிசனை ஊக்கப்படுத்தும் போரிஸ் ஜான்சன் !

கால நிலை மாற்றம் குறித்து துணிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் ஸ்காட் மோரிசனை தொலைப்பேசியில் அழைத்து வலியுறுத்தினார்.

Net Zero Emissions நோக்கிய இலக்கின் தேவையை பற்றி அவர் தொலைபேசியில் பேசினார்.பொருளாதார வளர்ச்சி மற்றும் Emissions-ஐ குறைப்பது ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தையும் திரு ஜான்சனின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

2050-க்குள் Net zero Emissions அடைவதே United Kingdom-ன் இலக்கு. ஆனால் ஆஸ்திரேலியா இது போன்ற நடவடிக்கை பின்பற்றுவதை தவிர்த்தது.Low Emission தொழில் நுட்பங்களின் ஆராய்ச்சிக்காக இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாக திரு மோரிசன் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

மேலும் Low Emission-ஐ அடையும் இலக்கு அடைவதில் ஆஸ்திரேலியாவின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படக்கூடாது என்று பிரதமர் தெரிவித்தார்.

கார்பன்-டை-ஆக்ஸைட் உமிழ்வதில் உலகில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் ஜப்பான் 2050-க்குள் zero emissions-ஐ அடைய உறுதி எடுத்துள்ளது.சீனாவும் 2060-க்குள் இந்த நிலையை அடைய உறுதியளித்துள்ளது.

தொழிலாளர்கள், வணிகக் குழுக்கள் மற்றும் தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியவை மத்திய அரசாங்கத்தை 2050-க்குள் zero emissions-ஐ ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.