Breaking News

Zero emissions-இலக்கில் ஆஸ்திரேலியாவின் தயக்கம் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

2050-ஆம் ஆண்டுக்குள் zero emissions இலக்கை அடைய உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள சூழ்நிலையில் ஆஸ்திரேலியா இதற்கு செவி சாய்க்காமல் இருப்பது விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியா மற்றம் ஜப்பான் இந்த இலக்கை நோக்கிச் செல்வதை வெளியுறவு துறை அமைச்சர் Marise Payne வரவேற்க மறுத்துவிட்டார்.

இதனால் காலநிலை மாற்றத்தில் ஆஸ்திரேலியாவின் பங்கு மிகவும் பின் தங்கிவிடும் என Senator Wong தெரிவித்தார்.

Zero emissions target-ஐ வரவேற்பதும் ,வரவேற்காதாதும் ஆஸ்திரேலியாவில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது அவை அந்தந்த நாடுகளுக்கான விஷயம் என்று Senator Payne கூறினார்.

மேலும் ,ஜப்பானும் தெங்கொரியாவும் அந்த இலக்கை வைத்தது தங்களுக்கு மகிழ்ச்சி ஆனால் அது அவர்களது முடிவு. நாங்கள் எங்கள் சொந்த கடமைகளில் மிகவும் கவனம் செலுத்துகிறோம் என அவரது கருத்தை கூறினார்.

மற்ற நாடுகளின் காலநிலை மாற்ற இலக்குகளை தன் மீது பொருத்தத்தேவையில்லை என ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.

ஜப்பான் 2050-க்குள் zero carbon emissions அடையவும், சீனா 2060-க்குள் carbon neutrality-யை அடையவும் இலக்கு தீர்மானித்துள்ளது.

தென் கொரிய அதிபரும் தனது நாடு 2050 ஆம் ஆண்டுக்குள் zero emissions-ஐ அடையும் என கூறியுள்ளார்.ஆனால் ஆஸ்திரேலியாவின் zero emissions திட்டத்தைப் பற்றி தெரிவிக்க Senator Payne தயக்கம் காட்டுகிறார். ஆனால் கால நிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாரிஸ் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 2030 ஆம் ஆண்டளவில் 2005 மட்டத்தில் இருந்து 26 முதல் 28 சதவீதம் வரை குறைப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் வணிக கவுன்சில், ஆஸ்திரேலிய தொழிற்துறை குழு, தேசிய உழவர் கூட்டமைப்பு, சுற்றுச் சூழல் மற்றும் சமூகக்கொள்கை குழுக்கள்.2050 க்குள் zero emissions-ஐ அடைய நாடு தழுவிய இலக்கை வலியுறுத்தியுள்ளன.