Breaking News

மாற்றுத்திறனாளிகள் மீது வன்முறை, புறக்கணிப்பு அதிகம்-ராயல் கமிஷன் அறிக்கை !

மாற்றுத்திறனாளிகள் மீது செயல்படுத்தப்படும் வன்முறை, புறக்கணிப்பு அவர்களை தவறாக நடத்துவது போன்றவை அவர்களது வாழ்வில் தீராத ரணத்தை ஏற்படுத்துவதாக ராயல் கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ளது.

நவம்பர் 2019 மற்றும் ஜுலை 2020க்கு இடையில் கமிஷனின் பொது விசாரணையின் படி இந்த அறிக்கை, சுற்றுச்சூழல் மற்றும் நிறுவன சவால்கள் முதல் சமூக அணுகுமுறைகள் வரை ஒவ்வொரு மட்டத்திலும் தடைகள் இருப்பதை கண்டறிந்தன.அவை மாற்றுத்திறனாளிகளை முழு சமூகமாக சேர்ப்பதை தடுக்கின்றன.

561 பக்க அறிக்கை கொள்கை மாற்றத்திற்கான பரிந்துரைகளை சொல்லாவிட்டாலும் மாரற்றுத்திறனாளிகளின் அனுபவங்களையும் அவர்களை தவறாக நடத்துவதற்கான அடிப்படை மனநிலையையும் தெரிவித்தது.

ஆஸ்திரேலியாவில் மாற்றுத் திறனாளிகள் கிட்டத்தட்ட 4.4 மில்லியன் இருக்கின்றனர்.இதில் தேசிய மாற்றுத்திறனாளிகள் காப்பீட்டு திட்டத்தில் 365,000 பேர் உள்ளனர். இருப்பினும் 2016 ஆம் ஆண்டில் 18 முதல் 64 வயதிற்கு உட்பட்ட 2.4 மில்லியன் மக்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.

அந்த அறிக்கையில் 36 மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் நடந்த கொடுமைகளை விவரிக்கிறது. பள்ளிகளில் கிண்டலுக்கும் கொடுமைக்கும் ஆளாகுதல், சுகாதாரத் துறையில் புறக்கணிப்பு, பாலியல் வன்முறை பணியிட பாகுபாடு போன்றவை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

First Nations மாற்றுத் திறனாளிகள் அதிகமான வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 12 மாதத்தில் 6 சதவீதம் பேர் உடல் ரீதியாக வன்முறை அனுபவிக்கின்றனர்.தேசத்தின் 52 சதவீத வன்முறைகள் First Nations மாற்றுத் திறனாளிகள் மீது நடைபெறுகிறது.

மாறுத்திறனாளிகளை சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கவும் ,அவர்களை பாதிக்கும் மற்ற விஷயங்களை ஆராயவும் அவர்களிடம் இருந்து மேலும் பிரச்சனைகளை கேட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை தெரிவித்தது.