Breaking News

இணையதள Shopping-னால் கடைகளில் Boxing Day -விற்பனை மந்தம் !

இணையதள Shopping-னால் கடைகளில் Boxing Day -விற்பனை மந்தம் !

இதுவரை இல்லாத அளவுக்கு Boxing Day விற்பனை, கடைகளில் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதிக மக்கள் இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்கியதால் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட 5% அதிகரித்து $2.75 Billion அளவுக்கு கடைகளில் விற்பனை இருக்கும் என National Retail Association எதிர்பார்த்தது. மேலும் Covid-19 முடக்கத்தினால் பல மாதங்கள் அவதிப்பட்ட சில்லறை வியாபாரிகளுக்கு இந்த Boxing Day விற்பனை நிம்மதி அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தனது அறிக்கையில் NRA chief executive Dominique Lamb தெரிவித்துள்ளார்.

Australian Shopping Calendar-ல் Boxing Day ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. Consumer Group CHOICE கூற்றின்படி, Boxing Day அன்று துணிகள் மற்றும் சமையலறை பொருட்கள் தான் அதிகளவில் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Paypal Online Payment Service நடத்திய ஆய்வில், அதிகமான மக்கள் இணையதளம் மூலமாக பொருட்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

1000 நபர்களிடம் நடத்திய ஆய்வில், ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடைகளில் பொருட்கள் வாங்க திட்டமிடவில்லை என்றும் தெரிகிறது. வழக்கமாக Boxing Day விற்பனையன்று, கடைகளுக்கு முன் மிக நீண்ட வரிசை மற்றும் கூட்ட நெரிசல் காணப்படும் என Paypal Australian Consumer Expert Danielle Grant தெரிவித்துள்ளார். இருந்தாலும் Covid-19 அச்சுறுத்தலால் இதுவரை இல்லாத அளவுக்கு பலர் இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்கிக் கொண்டதாக தெரிகிறது.

சிட்னியில் தொற்று பரவும் அபாயம் இருப்பதனால் மக்கள் இணையதள வாயிலாக பொருட்களை வாங்குமாறு NSW Premier Gladys Berejiklian மக்களைக் கேட்டுக்கொண்டார். Sydney CBD-யில் போக்குவரத்து நெரிசல் மிக குறைவாக காணப்பட்டதாகவும், வழக்கமாக நீண்ட வரிசை காணப்படும் கடைகள் வெறிச்சோடி இருந்ததாகவும் Australian Retailers Association’s Paul Zahra தெரிவித்துள்ளார்.

வழக்கமாக கிறிஸ்மஸ் இரவு முதல் கடைகளுக்கு முன்னால் பொருட்கள் வாங்க மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இளைய சமுதாயத்தினர் அனைவரும் இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்கி உள்ளதால் இணையதள விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு பிறந்தவர்களும் 68 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களும் இன்னும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கவே விரும்புகின்றனர்.

கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருவோர் முகமூடி அணியவும், சமூக விலகலை பின்பற்றவும் வியாபாரிகள் சங்கங்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த விற்பனை ஒருநாள் நடக்கக்கூடிய விற்பனை அல்ல என்பதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு NSW/ACT Secretary Bernie Smith தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக Boxing Day விற்பனை Christmas தினத்திலிருந்து 2 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும், ஆதலால் இன்னும் பொருட்கள் வாங்க அதிக நாட்கள் உள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடை பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சமூக விலகலை பின்பற்றி வரக்கூடிய அடுத்தடுத்த நாட்களில் பொருட்கள் வாங்க தங்களை திட்டமிட்டு கொள்ளுமாறும் தனது அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.