Breaking News

Latin America நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்தினை பயன்படுத்தியதில் Mexico மற்றும் Chile முன்னிலை !

கடுமையாக பாதிக்கப்பட்ட Latin America நாடுகளில் Covid-19 தடுப்பூசி மருந்து வினியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. Mexico மற்றும் Chile-ஐ சேர்ந்த முன்கள மருத்துவப் பணியாளர்களுக்கு முதல் தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டன. இந்த தடுப்பூசி 2020 ஆண்டில் தனக்கு கிடைத்த சிறந்த பரிசு என்றும், இது தனக்கு பாதுகாப்பையும் , தைரியத்தையும் கொடுப்பதாகவும் 59 வயதான Mexican செவிலியர் Maria Irene Ramirez தெரிவித்துள்ளார்.

Pfizer மற்றும் BioNTech இணைந்து தயாரித்த 3000 doses தடுப்புமருந்து, Belgium -லிருந்து சரக்கு விமானம் மூலம் வந்த மறுதினமே, மெக்சிகோவில் தொலைக்காட்சி நேரலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன. Mexico-வில் 1,20,000-க்கும் மேற்பட்ட Covid-19 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இது உலக அளவில் 4-வது இடமாகும்.

Chile-ல் 46 வயதான செவிலிய உதவியாளர் Zulema Riquelme-க்கு முதல் தடுப்பு ஊசி மருந்து செலுத்தப்பட்டது. தான் மிகவும் உணர்ச்சிமிகுதியுடனும், பதட்டமாகவும் இருப்பதாக, President Sebastian Pinera முன்னிலையில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் அவர் தெரிவித்திருந்தார். இந்த செவிலியர் உதவியாளர் அனைவருக்குமான நம்பிக்கை என Pinera பாராட்டினார். Brazil-ல் 1,90,000 Covid-19 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொண்ட Latin America நாடுகளில், Mexico-க்கு அடுத்து இரண்டாம் இடத்தில் Chile உள்ளது. தடுப்பூசி மருந்து பயன்பாட்டினை தொடங்க உள்ள Costa Rica , இந்த தடுப்பூசி Covid-19 முடிவுக்கான ஆரம்பம் என கூறியுள்ளது.

இதற்கிடையில் Argentina Russia-விடமிருந்து 3,00,000 doses Sputnik V தடுப்பு மருந்தினை பெற்றுக்கொண்டது. இந்த தடுப்பு மருந்தின் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், அர்ஜென்டினா இந்த தடுப்பு மருந்தை வாங்கிய முதல் Latin America நாடானது. Latin America நாடுகளுக்கு வழங்குவதற்கான தடுப்பு மருந்தினை தயாரிக்க Britain-ன் AstraZeneca -வுடன் Argentina மற்றும் Mexico ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

129 Million மக்களுக்கு இந்த தடுப்பு மருந்து இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என Mexico அரசு உறுதி அளித்துள்ளது. US நிறுவனம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட 34.4 Million doses Pfizer-BioNtech தடுப்புமருந்தில், 1.4 Million doses ஜனவரி 31-ஆம் தேதிக்குள் வந்தடையும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. China’s Cansino Biologics உடன் 35 million doses மற்றும் AstraZeneca உடன் 77.4 milliin doses மருந்துகள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் முன்னரே போடப்பட்டுள்ளன. மூன்றுவிதமான மருந்துகளில் 30million doses வாங்க Chile ஒப்பந்தம் போட்டுள்ளது என Pinera தெரிவித்துள்ளார்.