Breaking News

ஆஸ்திரேலியா வர்த்தகத்தில் பதட்ட நிலை… ஆஸ்திரேலிய ஒயின் மீது சீனா அதிரடி நடவடிக்கை !

சனிக்கிழமை முதல் ஆஸ்திரேலிய ஒயின் 107 முதல் 212 சதவீதம் சுங்கவரி சுமத்தியுள்ளதாக சீனா வர்த்தகத்தில் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் இந்த நியாயமற்ற செயலுக்கு ஆஸ்திரேலிய அரசு மிகவும் கவலை கொண்டுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய ஏற்றுமதியாளர்கள் வீழ்ச்சி அடைவார்கள் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பு சட்டங்களுடன் தொடர்புடைய சீனா தங்களுக்கு சாதகமாக சட்டங்களை மாற்றி அமைத்தது தெரியவந்துள்ளது. அதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஒயின் சந்தையில் $ 2.9 billion தான் கிடைத்துள்ளன. அதாவது தொழில துறையில் மொத்த மது ஏற்றுமதியில் 37 சதவீதம் தான் கிடைத்தது ஆகையால் ஆஸ்திரேலிய அரசு மிகவும் கவலை அளிக்கிறது என்று அறிவித்துள்ளது.

ஒயின் தொழில்துறையில் இது மிகப்பெரிய பேரழிவு தரும் அடி என்று வர்த்தக அமைச்சர் Simon Birmingham கூறியுள்ளார். சீனா போடப்பட்டுள்ள இந்த நுகர்வோர் வரியால் நுகர்வோர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். அதே சமயம் அதில் இருந்து விலகி செல்வர் ஆகையால் ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்களுக்கு பேரழிவு ஏற்ப்படுத்தக் கூடிய பாதிப்பை தருகிறது.

இது குறித்து Mr. Birmingham கூறுகையில் , இது ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்கின்றன ,அதாவது பார்லி, காட்டன், ரெட்மீட், கடல் உணவு, சர்க்கரை, மரம் மற்றும் நிலக்கரி ஏற்றுமதியில் தொடர்ந்து வர்த்தக வேலை நிறுத்தங்களை தொடங்கியுள்ளனர்.

Federal விவசாயத்துறை அமைச்சர் David Littleroud ஒயின் தொழில்துறையில் இப்படிப்பட்ட சுங்கவரி விதித்தது மிகவும் தவறானது என்று அறிவித்தார். ஆஸ்திரேலிய அரசு ஒயின் தொழில் துறைக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்போம் என்று கூறியுள்ளார். சீன மது குடிப்பவர்கள் சங்கங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்திரேலிய ஒயின் இறக்குமதியில் சீனா தனது எதிர்ப்பு விசாரணையை துவங்கியது.

ஆஸ்திரேலிய ஒயின் தயாரிப்பாளர்கள் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையில் தங்கள் இடத்தை பிடிப்பதற்கு நியாயமற்ற முறையில் விலைகள் குறைக்கின்றனர் என்று உள்நாட்டு உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.

நாங்கள் உண்மையான, தெளிவான வர்த்தகமே செய்கின்றோம். உலக வர்த்தகத்தில் உண்மையாக உள்ளோம் என்று Mr.Littleproud கூறியுள்ளார். அடுத்த 10 நாட்களில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முறியடிக்க எதிர்கொள்வார்கள். கடந்த ஆண்டு சீனாவுக்கு $1.3 billion மது ஏற்றுமதி செய்து தடம் பதித்தனர் என்று ஆஸ்திரேலிய அரசாங்க பதிவேட்டில் உள்ளது என்று கூறியுள்ளார்.