Breaking News

ஆப்கானிய போர்க்குற்ற அறிக்கையை தொடர்ந்து ,பல வீரர்கள் பணி நீக்கம் !

ஆப்கானிஸ்தான் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஒரு டஜனுக்கும் அதிகமான படைவீரர்களுக்கு அந்நிர்வாகம் நடவடிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளது , தற்போது அவர்கள் பாதுகாப்பு படையிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் SAS படையினரின் மோசமான அறிக்கையைத் தொடர்ந்து ,பலருக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்கியதாக பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை அன்று உறுதிப்படுத்தியது, ஆனால் சம்பந்தப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை குறித்து எந்த ஒரு விவரங்களும் இதுவரை வழங்கப்படவில்லை.

39 ஆப்கானிய பொதுமக்கள் , கைதிகள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதில், ஆஸ்திரேலிய சிறப்புப் படை வீரர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல தகவல்கள் The Brereton அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன.

Canberra-வில் இராணுவத் தளபதி Rick Burr ,இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,இதில் சம்மந்தப்பட்ட 13 நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறினார்.

இதுவரை யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்று Lieutenant-General Burr தெரிவித்தார்.இதில் சம்மந்தப்பட்ட தனிநபருக்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்குள் பதிலளிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

19 வீரர்களின் நடத்தை குறித்து விசாரிக்க ஆஸ்திரேலிய Federal Police-ஐ The Brereton அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.படையினருக்கு நடைமுறை நியாயத்தை வழங்குவது முக்கியம் என்று அவர் கூறினார்.தனிமனித உரிமை மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் , நடைமுறை நியாயதை பின் பற்றபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் இந்த அறிக்கையின் மூலம் செயல்பட நான்கரை ஆண்டுகள் ஆனது என்றும், தற்போது கொடுக்கப்பட்ட அறிக்கை ஒரு வாரத்திற்கு முன்பு வழங்கப்பட்டது என்றும் . நாங்கள் இப்போது அதன் மூலம் செயல்படுகிறோம். என்றும் அவர் தெரிவித்தார்.

போர் வீரர்களின் meritorious service விருதுகளை அகற்றுவதற்கான செயலை குறித்து கேட்டதற்கு, Lieutenant-General Burr கூறுகையில், அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை தாம் ஆதரிப்பதாக கூறினார்.