Breaking News

ஈரானிய சிறை தண்டனை முடிந்து Kylie Moore Gilbert ஆஸ்திரேலியாவுக்கு வந்தடைந்தார் !

கடந்த 800 நாட்களாக ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கல்வியாளர் Kylie Moore Gilbert ஆஸ்திரேலியா வந்தடைந்தார்.
Canberra விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் Kylie Moore-ஐ சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் சந்தித்தனர். Dr.Moore ஆஸ்திரேலியாவில் நுழைவதற்கு முன் அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று வெளியுறவு துறை அமைச்சர் Marise Payne தெரிவித்தார்.

Dr.Moore ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கு நன்றி கூறினார். மற்றும் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
Dr. Moore நல்ல மனநிலையில் இருக்கிறார் என்று Prime Minister Scott Morrison அறிவித்தார். சிறைச்சாலை இடமாற்றம் மூலம் கல்வி சுதந்திரம் பிரித்தெடுக்கப்பட்டது என்பதை ஆஸ்திரேலிய அரசு மறுத்து விட்டது.

ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்ற எவருக்கும் விடுதலை பற்றி எந்த வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று Mr. Morrison தெரிவித்தார். மற்ற இடங்களில் யாரேனும் விடுதலை செய்யப்பட்டு இருந்தால் அது இறையாண்மை அரசாங்கத்தின் முடிவாகும் என்று அறிவித்தார்.

நாட்டின் மூன்று குடிமக்களை Dr. Moore விடுவிக்கப்பட்ட அதே நாளில் விடுவிக்கப்படடுள்ளனர் என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றது. அவர்கள் 2012 ஆண்டு வெடிகுண்டு சதி திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். ஆனால் அவர்களை விடுவிக்கவில்லை என்றும் Tehranக்கு மாற்றியதாக Thailand அரசு தெரிவித்தது.

Dr.Moore Gilbert விரிவுரையாளராக Middle Eastern Melbourne பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தார். 2018 ஆண்டு கல்வியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்புகையில் Tehran விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dr. Moore மீண்டும் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டார் . ஆகையால் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சில மாதங்களுக்கு முன் அவரை Tehran-ல் உள்ள Qarchak சிறைச்சாலைக்கு மாற்றினர். ஏனெனில் கூட்ட நெரிசலுடைய சிறைச்சாலையாக இருந்தது. அந்த சிறையில் நோய் தொற்று அபாயம் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது.

ஈரான் ஒரு மாபெரும் தேசம் ,அதன் மீது மிக்க மரியாதையும் அபிமானமும் வைத்துள்ளேன். ஒரு நல்ல நண்பராகவும் நட்புடனே ஈரானை வட்டு வெளியேறினேன் என்று Dr. Moore தெரிவித்தார்.