Breaking News

ஆஸ்திரேலியாவை தவிர – 30 நாடுகள் சுற்றுச்சூழல் காலநிலையில், நடுநிலையை அடைந்துவிடுவோம் என உறுதிப்படுத்தியுள்ளது!

உலகெங்கிலும் உள்ள 30 நாடுகள் கார்பன் மாசு இல்லாமல் ஆக்குவோம் என உறுதிமொழி எடுத்துள்ளது. உலக அளவில் பல்வேறு தொழில் நுட்பத்தில் பல நாடுகளையும் உற்று நோக்க வைத்து வரும் சீனா வருகிற 2060க்குள் net-zero அடிப்படையில் படிப்படியாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை குறைக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது.

உலகில் ஏற்பட்டுள்ள அதிக தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காற்றில் கார்பன் டை ஆக்சைடு பெரிதும் கலந்து உள்ளதால் இப்பொழுது பல்வேறு நாடுகளும் அதைக் குறைப்பதற்கான வேலைகளில் மிக தீவிரமாக இறங்கியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தில் கிட்டத்தட்ட 195 நாடுகள் இதற்கு சாதகமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அதன்படி உலக அளவில் வெப்பத்தின் அளவு 2 டிகிரி குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகில் உள்ள பல்வேறு நாடுகள் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை எட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் சீனா மற்றும் யூரோப் உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.இந்நிலையில் யூரோப் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மிக அதிக அளவிலாக சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருவதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மிக முக்கியமான பெரிய நாடுகள் இந்த மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இடம் பெறவில்லை.

புதன்கிழமை அன்று நடந்த UN அசெம்பிளியில் சீனா குடியரசு தலைவர் Xi Jinping, கொரானாவில் இருந்து மீண்ட பிறகு உலக நாடுகளை சுற்றுச்சூழல் மீட்டெடுப்பான க்ரீன் ரெக்கவெரி-க்கு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது வரும் 2030 இல் கார்பனின் உமிழ்வு உச்சத்தை தொடும் எனவும் 2060க்குள் அதை படிப்படியாக குறைக்க வேண்டிய கடமையை நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

மேலும் உலகில் கார்பன் உமிழ்வை அதிகம் வெளியிடும் பெரும் நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது, எனினும் அதை கூடிய விரைவிலேயே கட்டுப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டு வந்து 2060ல் அதை முற்றிலும் கட்டுப்படுத்தி விடுவோம் என தெரிவித்திருந்தார்.

இதில் ஆஸ்திரேலியா பொருளாதார அடிப்படையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தி கிட்டத்தட்ட பாரிஸ் க்ளைமேட்டுக்கு கொண்டுவந்துள்ளது. கூட்டாட்சி அரசு கார்பன் நடுநிலையை பற்றியோ அல்லது புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகப்படுத்துவது பற்றியோ எந்த ஒரு பொதுவான பொறுப்பையும் செய்யவில்லை.

மற்ற வளர்ந்த நாடுகளைப் போல் 2050க்குள் net zero வை கொண்டு வருவோம் என நாங்கள் எதையும் உறுதிப்படுத்தவில்லை என professor Stefan கூறியுள்ளார்.மேலும் ஆஸ்திரேலியா மற்ற நாடுகளைப் போல அதிக அளவிலான கார்பனை வெளியேற்றுவதில்லை, எனவே அந்த நாடுகளைப் போல நாங்கள் சுற்றுச்சூழலில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது என எதையும் திட்டமிடவில்லை.எது எப்படியோ, ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மாநில பிரதேசங்களிலும் குறைந்தது 2050க்குள் கார்பன் நடுநிலையை உறுதிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளனர்.