Breaking News

டாஸ்மேனியாவின் தொலைதூர மேற்கு கடற்கரையில் மேலும் 200 திமிங்கலங்கள் சிக்கியுள்ளது !

டாஸ்மேனியாவின் தொலைதூர மேற்கு கடற்கரையில் சிக்கியுள்ள 200 திமிங்கலங்கள் பெருமாளும் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

துறைமுகத்தில் சிக்கித்தவிக்கும் திமிங்கலங்களின் எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது, அதில் 270 திமிங்கலங்கள் மணல்களில் சிக்கி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து Parks and Wildlife regional manager Nic Deka கூறுகையில்,” புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள திமிங்கலங்கள் அனைத்தும் 7 முதல் 10 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெரும்பாலான திமிங்கலங்கள் இறந்து விட்டதாக தெரிவித்தார். திமிங்கலங்களின் நிலை குறித்து மேலும் மதிப்பீடுகள் செய்யப்படும் என்றும்,நாங்கள் நினைத்த தூரத்தை விட சற்று அதிகமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

நீர் மிகவும் very dark tannin நிறத்தில் இருப்பதாகவும், அதனால் தான் சிக்கி தவிக்கின்றன என்றும், அங்கிருந்து தண்ணீரில் கழுவப்பட்டு மீண்டும் விரிகுடாவிற்கு வந்து கழுவப்பட்டு சேர்கின்றன என்று கூறியுள்ளார். மீட்பு குழுவினர் சுமார் 30 திமிங்கலங்களை மீட்டதாகவும்,ஆனால் இன்னும் பல திமிங்கலங்கள் சிக்கிக்கொண்டு இருக்கின்றன என்றும் மூன்றில் ஒரு பங்கு இறந்து விட்டதாக கூறுகின்றனர். கூடிய விரைவில் அவைகளின் நிலமை குறித்து தெரியவரும் என்றும் தெரிவித்தனர்.

இப்பகுதிகளில் விலங்குகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், அலைகள் வேகமாக அடிப்பதிலும் இதற்கு “one of the trickiest” என்று நிபுணர்கள் பெயரிட்டுள்ளனர்.இது குறித்து Marine Conservation Program wildlife biologist Kris Carlyon கூறுகையில்,”இந்த மாதிரியான திமிங்கலங்கள் ஆபத்து நேரத்தில் ஒன்றோடு ஒன்று கூப்பிடுவதை நம்மால் உணர முடியும் என்று கூறியுள்ளார். இந்த சடலங்களை எடுப்பதற்கான கடினமான வேலையை எவ்வாறு கையாள்வது என்பதையும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.