Breaking News

நிதி தொகை குறைக்கபட்டால் குடும்பத்தில் வன்முறைகள் அதிகரிக்கும் ! பயத்தில் மக்கள் !

நிதி குறைந்தால் பிரச்சனை தான் ! பெண்கள் சட்ட வல்லுநர்கள் கருத்து !

கொரோனா வைரஸ் காரணமாக பல குடும்பங்கள் வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசும் முடிந்த அளவிற்கு நிதி தொகைகளை கொடுத்து வருகின்றது. கொரோனா நிதி தொகை கொடுப்பது குறைக்கப்படும் பொழுது ,குடும்பங்களில் வன்முறைகளும், பிரச்சினைகளும் அதிகரிக்கும் என்று பெண்கள் சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர்.

தொற்று நோய்க்கான Senate விசாரணையில், கொடுக்க வேண்டிய மானியங்களும், வேலை இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகையும் குறித்து கடுமையான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இனிமேல் வரவிருக்கும் மாதங்களுக்கும், ஆண்டுகளுக்கும் தேவைகளை பூர்த்தி செய்யுமா என்றும் தேவைகளை குறித்து Women’s Legal Services Australia’s Helen Matthews பல கேள்விகளை எழுப்பினார். கடந்த செவ்வாய் அன்று நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியிருப்பதாவது,” தற்போது இருக்கும் நிதி உதவி மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கும் பொழுது, எங்கள் சேவைகளுக்கான தேவை கண்டிப்பாக அதிகரிக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறியுள்ளார்.

மகளிர் சட்டதிற்கான சேவைகள் அனைத்தும் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஏற்கனவே கணித்துள்ளது. குயின்ஸ்லாந்தில் ஊரடங்கு காரணமாக, 50 சதவீத கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் மேத்யூஸ் கூறியுள்ளார். தற்போது கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு $ 25 மில்லியன் நிதி மூலம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் மேலும் 123 வழக்கறிஞர்கள் தேவை என்றும் மேத்யூஸ் கூறினார்.

இதுகுறித்து பெண்கள் வன்முறைக்கு எதிராக போராடும் கூட்டணி Tina Dixson கூறுகையில் ,”பெண்கள் வேலை தேடுபவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது நிதி உதவியை தற்போது குறைத்தால், அவர்கள் வாழ்க்கையில் வறுமைக்கோட்டுக்கு கீழே செல்ல வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார். பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்காகவும், தவறான உறவுகளில் இருந்து தப்பிக்க நினைக்கும் பெண்கள் தங்களது ஊதியங்களை அதிகமாக வாடகைக்கு செலவு செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார், நிதி கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே ஆபத்தான சூழ்நிலைகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

The centre’s director Kate Fitz-Gibbon கூறுகையில், “வன்முறையுடன் வாழும் குழந்தைகளை இந்த தொற்றில் இருந்து காப்பாற்ற அரசு தவறிவிட்டது “என்றும் குற்றம் சாட்டியுள்ளார். “குழந்தைகளுக்கு ஆதரவளிக்க தவறினால் பல ஆண்டுகள் கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க கூடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதால் ,அதனை கடைபிடிக்கும் போது பெண்களுக்கு உதவி செய்யும் வாய்ப்புகளும் குறைந்துவிடுகின்றது என்று Associate Professor Fitz-Gibbon கூறியுள்ளார். வன்முறை பிரச்சினைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொகையான $ 150 மில்லியனில் பாதி மட்டுமே கொடுக்கபட்டுள்ளதாகவும், மீதி எப்பொழுது கொடுக்கப்படும் என்ற எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்று Monash’s Naomi Pfitzner வருத்தம் கூறியுள்ளார்.

குயின்ஸ்லாந்து Women’s Legal Service chief executive Angela Lynch இதுகுறித்து கூறுகையில், இந்தப் பணம் கவுன்சிலிங் சர்வீஸ்களுக்கு வைக்கப்பட்டுள்ளது என்றும், கொரோனா பிரச்சனையில் இருந்து விலக்கப்பட்ட பிறகு, வன்முறையால் பாதிக்கப்பட்ட தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இதன் மூலம் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர் என்ற செய்தி வந்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.

எது எப்படியோ குழந்தைகளும் பெண்களும் அதிகம் பாதுகாக்க பட வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும் . அரசு எடுக்கும் பல புதிய முடிவுகள் அனைவருக்கும் சாதகமாக இனியாவது இருக்கம் என்று நம்புவோம் .