Breaking News

பல ஆண்டுகளுக்கு பிறகு கடலுக்குள் நீந்த இருப்பதால் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் வெள்ளை திமிங்கலங்கள்.

பெலுகுவா திமிங்கலங்கள் பாலூட்டி இனங்களில் மிகப்பெரியதாகும். பெலுகுவா திமிங்கலங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா நாட்டில் பிடிப்பட்ட இரண்டு வயதான இந்த இரு வெள்ளை திமிங்கலங்கள் முதலில் ரஷ்யாவில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு பிறகு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்தில் உள்ள ஓசன் ஒர்ல்ட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

White whale soaking in the joy of being able to swim into the ocean after so many years,பிறந்து சில வருடங்கள் மட்டுமே கடலில் நீந்திய இந்த வெள்ளை திமிங்கலங்கள் பிறகு பெரும்பாலும் ஆய்வுக்கூடங்களிலும், செயற்கை நீர் நிலைகளிலுமே தன்னுடைய வாழ்நாளை
கழித்து வந்தது. பத்தாண்டுகளுக்கு மேலாக கடலுக்கு வெளியே, செயற்கை நீர் பூங்காவில் மட்டுமே வாழ்கையை கழித்து வந்த இந்த வெள்ளை திமிங்கலங்கள், பிரிட்டனை சேர்ந்த Sea Life அறக்கட்டளையின் முயற்சியால் மீண்டும் கடலுக்கு திரும்புகின்றன.

சீனாவிலிருந்து ஐஸ்லாந்துக்கு மிகப்பெரிய பயணத்தை இந்த வெள்ளை திமிங்கலங்கள் மேற்கொண்டிருக்கின்றன.

White whale soaking in the joy of being able to swim into the ocean after so many years,.இதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கார்கோ மூலமாக போயிங் சரக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து வந்தடைந்தது பிறகு கடலில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட சரணாளையத்தில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கடலுக்கு வெளியே வாழ்ந்து வந்ததால் இந்த சுறாக்களின் உடலும் , மனதும் கடலுக்கு ஏற்றவாறு தயாரானவுடன் இந்த பெலுகுவா திமிங்களங்கள் சுதந்திரமாக கடலுக்கு செல்லும். வீடு திரும்ப இருப்பதை அறிந்த இந்த வெள்ளை திமிங்களங்கள் மிகுந்த மகிழ்சியில் இருப்பதாகவே தெரிகிறது.

Link Source: https://bit.ly/36kgifF