Breaking News

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் கப்பல் விடுவிப்பு : அபராதத் தொகை தொடர்பான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அறிவிப்பு

Release of Evergreen ship stranded in Suez Canal, Announcement following compromise on fines

மார்ச் மாதத்தில் சூயஸ் கால்வாயில் உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் கிவன், ஆறு நாட்களுக்கும் மேல் ஒற்றை வழித்தடத்தில் குறுக்காக சிக்கி மீட்க முடியாமல் கடும் சிக்கலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில் சூயஸ் கால்வாய் ஆணையம் சம்பந்தப்பட்ட கொள்கலன் கப்பல் நிறுவனத்திற்கு அபராதத் தொகை விதித்தது.

Release of Evergreen ship stranded in Suez Canal, Announcement following compromise on fines.900 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது இதனையடுத்து 550 மில்லியன் டாலராக அபராத தொகை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான அபராத தொகை தொடர்பான விஷயத்தில் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் முடிவு எட்டப்பட்டது. இதனை எடுத்து கப்பலை விடுவிக்க சூயஸ் கால்வாய் ஆணையம் அனுமதி வழங்கியது.

இதனையடுத்து கப்பலும் அதன் இந்திய குழு பணியாளர்களும் மூன்று மாதங்களுக்கும் மேலாக கிரேட் பிட்டர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் அங்கிருந்து புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Release of Evergreen ship stranded in Suez Canal, Announcement following compromise on fines,எகிப்திய நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையிலான அபராதத் தொகை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை அடுத்து 18 ஆயிரத்து 300 கொள்கலன்களை சுமந்துள்ள எவர் கிவன் கப்பல் தற்போது சூயஸ் கால்வாயின் Mediterranean பகுதியில் மீண்டும் மிதக்கத் தொடங்கியுள்ளது. சூயஸ் கால்வாய் நகரமான Ismailia -ல் இதற்காக விழா ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பிட்ட அபராதத் தொகை சூயஸ் கால்வாய் நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் கப்பலை எடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் நிகழ்ந்த பாதிப்பு உள்ளிட்டவற்றை சரி செய்வதற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3wpPPI8