Breaking News

WA ஹோட்டலில் தனிமைப்படுத்தபட்ட முகாமில் இங்கிலாந்தில் இருந்த கொரோனோ பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது !

தனிமைப்படுத்தபட்ட முகாமில் COVID-19 தொற்று இங்கிலாந்தின் தொற்று நோயை விட மிகவும் பரவக்கூடியவை என்று
மேற்கு ஆஸ்திரேலியா அரசு கூறியுள்ளது.பெர்த்தில் தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்த COVID-19 சோதனைக்கு உறுதி செய்யப்பட்ட மூன்று பேருக்கு இங்கிலாந்திலிருந்து பரவிய வைரஸ் மாறுபாட்டை கொண்டுள்ளனர்.

Premier Mark McGowan கூறியதாவது, மரபணு சோதனைகள் இங்கிலாந்தில் வைரஸ் அழுத்தத்தை உறுதி செய்துள்ளது. மற்றும் பாதுகாப்பான தனிமைப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது எனக் கூறினார்.மேலும் MC-GOWAN இது தீங்கு விளைவிக்க கூடியதாகும், இது வெளியே இருக்க வேண்டும், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்துகிறது. மேலும் இது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பெரும்பாலான மரணங்களை ஏற்படுகிறது எனக் கூறினார். மேலும் “நாங்கள் வைரஸை வெளியே வைத்திருக்க வேண்டும், அது நம் மாநிலத்திற்கு வருவதை தடுப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம். எல்லைகளை பாதுகாப்பதும் இதில் அடங்கும் என Premier Mark McGowan கூறினார்.

Mark McGowan ஆஸ்திரேலியாவுக்கு பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் சோதனை செய்ய வேண்டும் என்பதை ஆதரித்தார். குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு முன்பாகவே சோதனை செய்வதையும் ஆதரித்தார். மேலும் உலகில் உள்ள எல்லா நாடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் தொற்றுக்கான சோதனை உறுதி செய்வதற்கும், அவர்கள் ஆஸ்திரேலியா மக்களுடன் விமானங்களில் ஏறுவதற்கு முன்பாக தொற்று இல்லை என உறுதிப்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த பாதுகாப்பு அம்சமாக இருக்கும் என்று கூறினார். என்னைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்காக செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஒழுங்காக செய்தால் எங்கள் நாட்டு மக்களை சிறந்த முறையில் பாதுகாக்க முடியும் என்று அவர் கூறினார்.

Victorian Emergency Services Minister Lisa Neville கூறுகையில், இங்கிலாந்தில் தற்போது வரை ஐந்து கொரோனா தொற்று உள்ளன. மேலும் அவர், ” எங்கள் வேலை என்பது எங்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் முடிந்தவரை வலுவாக இருப்பதை உறுதி செய்வதும், இது வெளியேற வாய்ப்பில்லை, இது இங்கிலாந்தில் உருவான ஒன்றாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த விகாரமாக இருந்தாலும் சரி, அனைத்தையும் பாதுகாப்பதே எங்களது முக்கிய வேலை என்று கூறினார்.

மேலும் சுகாதார அதிகாரிகள் மெல்போர்னில் தனிமைப்படுத்தப்பட்ட விமான குழுவினரிடம் உறுதி செய்யப்பட்ட COVID-19 பாதிப்பு உள்ளவர்கள் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்று கூறினார். கடந்த இரண்டு வாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான குழு உறுப்பினர்களில் எட்டு பேர் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்.

சுகாதார அதிகாரி kerry chant கூறுகையில் NSW-ஐ பொறுத்தவரையில் உலகில் ஏற்படும் மாறுபட்ட வைரஸ்களிலிருந்து சமூகத்தை பாதுகாப்பதற்கு “silver bullet” இல்லை என்றும் அவர் கூறினார். NSW Premier John Barilaro ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க எப்போதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

அமெரிக்கா, லெபனான் ,சிங்கப்பூர் ,பாகிஸ்தான், இந்தியா ,தென்கொரியா, ஜப்பான், பிரான்ஸ் ,ஜெர்மனி ,இத்தாலி, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை சார்ந்த கொரோனா வைரஸ் வகைகளை உலகில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் பதிவு செய்துள்ளன.