Breaking News

வரலாறு காணாத பெரும் வெள்ளம்-2 நாட்களாக மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவிப்பு !

பலத்த மழை மற்றும் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சிட்னியில் வடமேற்கு பகுதியில் வசிப்பவர்கள் எந்த நேரத்திலும் அங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Colo ஆற்றில் நீரின் அளவு உயர்ந்து வருவதால், அதை சுற்றி அங்கு வசிப்பவர்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Unprecedented flood-heavy rainfallஇது குறித்து வானிலை மையம் கூறுகையில், 1988 மற்றும் 1990களில் ஏற்பட்ட வெள்ளத்தைபோல, தற்போதும். Hawkesbury ஆற்றில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. செவ்வாய் கிழமை வரை பலத்த மழை தொடர்ந்து பெய்யும். மழை பல பகுதிகளில் 100 முதல் 200 மி.மீ. மற்றும் சில பகுதிகளில் 300 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியது. இதனால் சிட்னி மற்றும் Midnorth கடற்கரை பகுதியில் அடுத்த வரும் நாட்களில் 100 மி.மீ மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் அவசர மையம் கூறுகையில், சிட்னியின் வடமேற்கு புறநகர் பகுதியில் உள்ளவர்கள் வெளியேற தயாராக இருக்குமாறும், ஏற்கனவே 18000 மக்களை Northern NSW செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

Agnes ஆற்றின் நீரின் அளவு உயர்ந்து வருவதால் அதன் கரையோரம் வசிப்பவர்களுக்கும், North Richmond, Upper Nepean River at Menangle Bridge ஐ ஒட்டி வசிப்பவர்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Unprecedented flood-heavy rainfall-more evacuation warnings announced 1Port Macquarie பகுதியில் வெள்ளநீரில் தத்தளித்த இரண்டு பெரியவர்கள், நான்கு சிறியவர்களை காப்பாற்ற NSW தீ மற்றும் மீட்பு குழுவினர் life raftல் பாம்பு குதிப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். NSWவின் top forecaster கூறுகையில், பல நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஒரு வாரத்தில் ஒரு மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றார். நகரின் பல பகுதிகள் கடந்த 2 நாட்களாக மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவிக்கிறது. சாலைகள், வீடுகள் மிகவும் மோசமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

Gladys Berejiklianமாநில முதல்வர் Gladys Berejiklian கூறுகையில், நம்மை நாமே காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும். வரும் நாட்கள் மிக கடினமாக இருக்கும் என்பது நமக்கு தெரியும். எனவே அதை நாம் எதிர்கொள்ள தயாராக வேண்டும். மேலும் Macleay மற்றும் Smithtown ஆற்றில் நீரின் அளவு எப்போது வேண்டுமானாலும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வி Macquarie ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், Jamisontown western part of Jamisontown, Penrith, and the northern end of Mulgoa பகுதியிலிருந்து வெளியேறியவர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்பி விட்டனர் என்றார். 24 மணி நேரமும் மக்களை காப்பாற்ற Australian Defence Force, 2 தேடும் rescue helicopters ஐ மீட்பு குழுவிற்கு தந்துள்ளது.