Breaking News

University of Queensland(UQ) கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைகள் நிறுத்தம் !

ஆஸ்திரேலியாவில் தயாராகிவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தில், 50 million doses வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அரசு நிறுத்தியுள்ளது. பரிசோதனையின் முதல் கட்டமாக தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்ட சிலருக்கு தவறுதலாக HIV அறிகுறிகள் இருப்பதாக முடிவுகள் வந்துள்ளதை அடுத்து, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை நிறுத்துவதாக UQ மற்றும் biotechnology நிறுவனமான CSL அறிவித்துள்ளன. விஞ்ஞானிகளின் அறிவுரையின்படி, இந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான முடிவு கடந்த வியாழன்று எடுக்கப்பட்டது என தேசிய பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது.

நமது கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து திட்டக்குழு , 4 தடுப்பூசி மருந்துகளை கண்டறிந்துள்ளது என்றும், அவைகள் மூன்றாம் கட்ட பரிசோதனையை கடக்கும் என்றும், ஆஸ்திரேலியாவில் விரைவில் அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் Prime Minister Scott Morrison வெள்ளியன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த 4 தடுப்பு ஊசி மருந்துகளும், மூன்றாம் கட்ட பரிசோதனையை தாண்டி வரும் என்று எந்த காலகட்டத்திலும் உறுதி அளிக்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

UQ-CSL ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, AstraZeneca தயாரித்து வரும் தடுப்பூசி மருந்தில் 20 million doses அதிகமாகவும், மேலும் Novavax.தயாரித்து வரும் மருந்தில் 11 million doses வாங்க இருப்பதாகவும் Mr Morrison அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மக்களுக்காக 140 million doses தடுப்பூசி மருந்துகள் இருக்கின்றன எனவும், இது ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகைக்கு போதுமானதாக இருக்கும் என்றும் Health Minister Greg Hunt கூறினார். அதிக அளவு விகிதத்தில் தடுப்பூசி மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன எனவும், உலக அளவில் எந்த ஒரு மக்கள் தொகைக்கும் கிடைக்கும் அளவில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். CSL-உடன் ஏற்பட்ட ஒப்பந்த முறிவு பரஸ்பரமாக எடுக்கப்பட்டதாகவும், இது விஞ்ஞான செயல்முறை நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

UQ -உடன் ஏற்பட்ட இந்த ஒப்பந்த முறிவு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் இருந்தபோதிலும் பல நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் பரிசோதனை ஈடுபட்டிருக்கின்றன எனவும் Queensland Premier Annastacia Palaszczuk தெரிவித்தார். மேலும் UK -யில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தடுப்பூசி மருந்து கொடுக்கப்பட்டு இருப்பதை அனைவரும் உற்று நோக்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

பரிசோதனை முதல் கட்டமாக 216 நபர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பு மருந்தில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை என தனது அறிக்கையில் UQ மற்றும் CSL தெரிவித்துள்ளது. அதிக அளவிலான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி மருந்து கொடுக்கப்பட இருப்பதினால், எச்ஐவி பரிசோதனையில் சில முக்கியமான மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

ஆதலால் இந்த பரிசோதனையை தொடர வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறுகிய காலத்தில் இந்த தடுப்பூசி மருந்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி மீண்டும் சோதனையை தொடர்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று UQ vaccine co-lead Paul Young தெரிவித்துள்ளார். தடுப்பு ஊசி மருந்தினை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதே மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் உள்ள தொழில்நுட்ப நடைமுறை மிக முக்கியமான பரிசோதனைகளில் வெற்றி கண்டுள்ளது அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்படும் தடுப்புமருந்து மிகப் பாதுகாப்பானதாகவும் கொரோனாவை முற்றிலுமாக குணப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த மருந்தாக இருக்குமென்றும் நம்பப்படுகிறது.

வரும் புத்தாண்டு தொடக்கத்தில், தடுப்பு ஊசி மருந்து பயன்பாட்டை தொடங்க விரும்புவதாகவும் இந்த அரசு தெரிவித்துள்ளது.இதற்கிடையில்,Pfizer மற்றும் BioNTech தயாரித்த COVID-19 தடுப்பு மருந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்த முதல் மேற்கத்திய நாடு ஆனது பிரிட்டன்.