Breaking News

டொயோட்டா நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காரை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்துகிறது

2025 இறுதியில் தனது ஏழு மாடல் எலக்ட்ரிக் கார்களில் முதல் காரை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக டொயொட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021 ஷாங்காய் கார் கண்காட்சியில் டொயோட்டா BZ4X ரக கார்களின் மாதிரியை காட்சிப்படுத்தியது. உலகின் மிகப்பெரும் கார் சந்தையில் மைய மேடையை தனதாக்கிக் கொள்கிறது டொயோட்டா நிறுவனம்.

பெட்ரோல் – எலக்ட்ரிக் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் கார்களை தயாரிப்பதில் உலகில் முன்னோடியான டொயொட்டா, 17 மில்லியனுக்கும் அதிகமான ஹைபிரிட் கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த வகையில், முழு முதல் எலக்ட்ரிக் காரை டொயோட்டா BZ4X ரக காரை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது.

Toyota is launching its first electric car in Australia 1ஆஸ்திரேலியாவில் கார் அறிமுப்படுத்துதல் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும், அதன்பின்னர் மற்றநாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ரக எலக்ட்ரிக் காரின் விலை இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் எம்.ஜி, ஹூன்டாய், நிஸ்ஸான் ஆகிய மூன்று நிறுவன கார்களை விட கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம், பேட்டரி பேக்அப் உள்ளிட்ட காரின் சிறப்பம்சங்களை ரகசியமாகவே வைத்திருக்கிறது நிறுவனம்.

ஆஸ்திரேலியாவின் தேவைகள் அறிந்து அதற்கான சிறப்பம்சங்களோடு BZ4X கார்கள் தயாரிக்கப்படுவதாகவும், எலக்ட்ரிக் ரக கார்களின் தேவையை முழுவதுமாக திருப்திபடுத்தும் என்றும் டொயொட்டா நிறுவனத்தின் ஆஸ்திரேலிய தலைவர் Sean Hanley தெரிவித்துள்ளார்.