Breaking News

வாழ்வதை விட இறப்பது எளிது’: உலக வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் ‘இருண்ட’ அத்தியாயத்தைக் குறிக்கும் ஹோலோகாஸ்ட் கதையைப் பற்றி உயிர் பிழைத்தவர் பகிர்ந்து கொள்கிறார் !

Holocaust survivor

1926 இல் Czechoslovakia -ல் பிறந்தவர் Mrs Horak . யூத படுகொலையில் தப்பிப்பிழைத்த இவர் தற்போது தான் உயிருடன் இருப்பதே ஒரு தனிப்பட்ட வெற்றி என கூறியுள்ளார். நாஜி ஜெர்மனியின் பட்டதாரி என தன்னை கூறிக்கொள்ளும் இவர், அங்கு நடந்த துன்புறுத்தலான ஆட்சியால், சிறுபான்மையினருடன் சுமார் ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர் எனவும் கூறினார்.

இவர் புதன்கிழமை அன்று, Auschwitz-Birkenau 76 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடந்த நாஜி ஒழிப்பு முகாமில் தன் கதையை பற்றி கூறினார். அப்போது, நான் ஆஷ்விட்ஸில் ஒரு கைதியாக இருந்து, ஹோலோகாஸ்ட் தப்பிப்பிழைத்தவள். ஆஷ்விட்ஸ் ஒரு நகரமாக இருந்தது. அங்கு வாழ்வதை விட இறந்துவிடுதே மேல் என்ற வகையில் சூரிய ஒளி இல்லாமல், பறவைகளின் சத்தம் கூட கேட்காத அளவு மிக மோசமாக இருந்தது.

ஆஸ்திரேலியா முழுவதும் மக்கள் முன், ஒரு சர்வதேச படுகொலை நினைவு தினமாக முதன் முதலாக இந்த ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியர்களுக்கு சிறந்த கல்வி கற்பிப்பதற்காக கான்பெராவில் உள்ள ஒரு ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகத்திற்கு மத்திய அரசு $75,000 வழங்கியுள்ளது. இந்த நினைவு நாளில், Prime Minister Scott Morrison, Treasurer Josh Frydenberg மற்றும் Senator Penny Wong போன்ற மற்ற பேச்சாளர்களும் உள்ளனர்.

தொடர்ந்து மனிதநேயத்தை பற்றி பேசிய Mrs Horak , நரகத்தில் இருந்து உயிர் பிழைத்து வந்தவரின் வலியை, உலகத்தில் யாராலும் புரிந்துகொள்ள முடியாது என்றார். German troops Slovakia -க்கு அணிவகுத்து வந்த பொது தனக்கு 17 வயது என்றும், அப்போது அவரது குடும்பத்தினர் சிலர் தலைமறைவாக சென்றதாகவும், சிலர் நாஜிக்களின் பிடியில் சிக்கியதாகவும் கூறினார்.

அதன் பின்னர் அங்கிருந்து தான் Auschwitz மற்றும் Bergen-Belsen உட்பட பல முகாம்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு ஏப்ரல் 15, 1945 அன்று பிரிட்டிஷ் மற்றும் Canadian troops-களால் முகாமில் இருந்து விடுதலை பெற்று உயிர் பிழைத்ததாக கூறினார்.ஆனால் அந்த முகாமில் தனது மொத்த குடும்பமும் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

வளர்ந்து வரும் யூத-விரோதத்தின் கவலைகள்

The United Nations General Assembly 2005 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியை Holocaust-டால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக சர்வதேச நினைவு தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அது பற்றி Sydney Jewish Musuem historian Professor Konrad Kwiet செய்தியாளர்களிடம், நினைவுகளை உயிரோட்டமாக வைத்திருக்கவும், Holocaust-ஐ நினைவில் வைத்துக்கொள்ளவும் தான் இந்த நாள் என கூறினார்.

இது ஒரு ஐ.நா. தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டதால், இது அனைத்து வகையான இனவெறி மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கடமையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் யூத எதிர்ப்பு மற்றும் வெறுப்பு எல்லா இடங்களிலும்” அதிகரித்து வருவதாக பேராசிரியர் Kwiet கூறியுள்ளார்.

Holocaust -ல் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்த Treasurer Josh Frydenberg , புதன்கிழமை அன்று அமெரிக்க கேபிட்டலில் நடந்த பயமுறுத்தும், வெறுக்கத்தக்க, அருவருப்பான நாஜி கோஷங்களைப் பார்த்து அவரும் வெறுப்படைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் யூத-விரோத வெறுப்பால் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடி குறித்து எச்சரிக்க சர்வதேச ஹோலோகாஸ்ட் நினைவு தினத்தைப் பயன்படுத்தியதாக United Nations General-Secretary Antonio Guterres கூறினார்.

உலக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக தான் Holocaust உள்ளது என Mr Frydenberg தெரிவித்துள்ளார். யாராக இருந்தாலும் ஹோலோகாஸ்ட்டைப் புரிந்துகொள்வதும், கடந்த காலத்தை பற்றி அறிந்துக்கொள்வதும் நமக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை கொடுக்கும் என்றும் அது மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே “ஹோலோகாஸ்ட் கல்வி என்பது அனைத்து மாணவர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடமாகும். அதற்கு நாட்டின் தலைநகரில் உள்ள புதிய ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் உதவும்” என்று Federal Education Minister Alan Tudge கூறினார்.

‘இறுதியாக வெளிச்சத்தை அடைந்தேன்’ – Mrs Horak

போர் முடிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, Mrs Horak மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் குணமடைந்த பின்னர் கணவருடன் 1948 இல் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததாக கூறினார். மேலும் , போரில் பலர் இல்லாதபோது நான் ஏன் உயிர் பிழைத்து இருக்கிறேன் என நான் அடிக்கடி ஆச்சரியப்படுகிறேன், ஆனால் பல வருடங்கள் கழித்து இருளில் இருந்தது மீண்டு தற்போது ஒளியை பார்க்கிறேன் என அவர் கூறினார்.

மேலும் நான் உயிருடன் இருப்பதை ஒரு தனிப்பட்ட வெற்றியாக கருதுகிறேன். கடந்த காலத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றும் அது எப்போதும் மீண்டும் மீண்டும் நம் நினைவில் வைத்திருக்க வேண்டும், என்று Mrs Horak கூறியுள்ளார்.