Breaking News

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு திங்கட்கிழமை ஏப்ரல் 26 அதிகாலை முதல் அமல்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்க அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் பாலகம், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு 10000 ஐ கடந்து வருகிறது.

The Tamil Nadu government on Monday (April 26) imposed additional restrictions to control the spread of corona infection in Tamil Nadu‌இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தும் நோக்கில் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
‌அதன்படி ஏற்கனவே இருந்த ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுபான பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் இயங்க அனுமதியில்லை மளிகை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டாலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

‌மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

‌ஹோட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
‌அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.

‌திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.

‌இறுதி ஊர்வலம் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை புதுச்சேரி தவிர்த்த மற்ற மா நிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் தமிழக அரசின் இணைய பக்கத்தில் பதிவு செய்த பிறகே தமிழகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‌தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

Link Source: https://cutt.ly/Yv4xvcr