Breaking News

நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் வார்டு மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நியூ சவுத் வேல்ஸ் அரசு அவரை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைத்துள்ளது.

The New South Wales government has moved a motion to suspend MP Gareth Ward following allegations of sexual harassment.

ஆஸ்திரேலியாவின் கியாமா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக கரேத் வார்டு இருந்து வருகிறார். இவர் மீது இரண்டு ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு உறுப்பினர் கரேத்தால் தன்னுடைய 17 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக ஒரு நபர் தெரிவித்துள்ளார்.

அதேபோல 2015-ம் ஆண்டு 27-ம் வயதில் இருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் வார்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மற்றொரு நபர் தெரிவித்துள்ளார். இந்த அடுக்கடுக்கான புகாரால் ஆஸ்திரேலிய அரசியல் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது.

அதன்காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து கரேத் வார்டுவை நீக்குவதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் பால் டூலே, நாடாளுமன்றத்தில் இருந்து உறுப்பினர் கரேத்தை வெளியேற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன. அதற்கான சட்ட ஆலோசனைகளை பெற்று வருகிறோம் என்று கூறினார்.

Link Source: https://ab.co/380OZvf